பிறந்த வருடத்தைவிட, உங்கள் சருமம் இருப்பதை வைத்துதான் உண்மையான வயதை கணகிடலாம். ஏனெனில் நல்ல ஆரோக்கியமான உடல் உள்ளுறுப்புகள் வயதை தீர்மானிக்கின்றன. உள்ளுறுப்புகளின் இளமை உங்கள் சருமத்தில்தான் பிரதிபலிக்கும்.
நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதைப் போல், எந்தவித கெமிக்கல்கள் இல்லாத அழகு சாதனங்களை பயன்படுத்தினால் சருமம் பாதிப்படையாமலே இருக்கும். உங்கள் சருமம் குளிர்காலத்தில்தான் அதிகம் பாதிக்கப்படும். ஈரப்பசை குறைந்து, வறட்சி எற்படும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்கும்.
இதற்கு எளிதான ஆனால் மிகவும் பலனளிக்கக் கூடிய ஒரு குறிப்பு இங்கே தரப்பட்டுள்ளது. இந்த குறிப்பு உங்கள் சருமத்திற்கு பொலிவை தரும். குளிர்காலத்தின் வறட்சியை போக்கும். புது தேஜஸை தரும். எப்படி செய்வது என பாருங்கள்.
தேவையானவை ; சோற்றுக் கற்றாழை – கால் கப் தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் – 2 துளிகள் புதினா எண்ணெய் – 2 துளிகள்
சோற்றுகற்றாழையின் சதைபகுதியை எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இதில் தேங்காய் எண்ணெய், புதினா மற்றும் லாவெண்டர் எண்ணெய்களை கலந்து ஒரு பாட்டிலில் சேகரித்து காற்று பூகாதவாறு மூடி நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள். இதனால் ஒன்றோடு ஒன்று கலந்துவிடும்.
இதனை குளித்தவுடன் தினமும் போட்டுக் கொள்ளுங்கள். அற்புதமான மாய்ரைஸராக செயல்படும். சுருக்கங்களை போக்கிவிடும். முகப்பரு, கரும்புள்ளி ஆகியவற்றை தடுக்கும். முயன்று பாருங்கள்.