36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

அக்குள் பகுதியில் அதிக வியர்வை என்ன செய்யலாம்?

எனக்கு அக்குள் பகுதியில் அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது. உடைகளில் வழிந்து, எப்போதும் அந்தப் பகுதி ஈரமாகவே இருக்கிறது. சில நேரங்களில் வியர்வை வாடையும் வருகிறது. புடவை, ஜாக்கெட் அணிகிற போது மிகவும் தர்மசங்கடமாக உணர்கிறேன். இதற்கு என்ன செய்யலாம்?

அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி

எடை அதிகமாக இருந்தாலும் இந்தப் பிரச்னை வரும் என்பதால், அதை முதலில் கவனிக்க வேண்டும். குறிப்பாக தோள்பட்டைகளில் அதிக பருமன் சேராமலிருக்க கைகளை தினமும் சில முறைகள் கடிகாரச் சுழற்சியிலும் அதற்கு எதிர் சுழற்சியிலும் சுற்ற வேண்டும். 100 சதவிகித காட்டன் உடை மற்றும் உள்ளாடைகளே அணிய வேண்டும். அக்குள் பகுதியில் உள்ள ரோமங்களை நீக்க கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.

கோரைக்கிழங்கு – 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம், வெட்டிவேர் – 50 கிராம், பூலாங்கிழங்கு – 100 கிராம் எல்லாவற்றையும் நைசாக அரைத்து, சிறிது எடுத்து வெந்நீரில் குழைத்து அக்குள் முதல் முழுக்கைகளுக்கும் தடவி 5 நிமிடங்கள் ஊறிக் குளிக்கலாம்.

மரிக்கொழுந்து – 200 கிராம், வெள்ளரி விதை- 50 கிராம், பயத்தம் பருப்பு- 100 கிராம் மூன்றையும் நைசாக பொடித்து, அக்குள் பகுதியில் பேக் போல போட்டுக் குளித்தால் அந்த இடம் மென்மையாகும். நாற்றம் நீங்கும்.குப்பை மேனி இலை, வில்வ இலை, துளசி, பூலாங்கிழங்கு – தலா 100 கிராம், வேப்பந்தளிர் – 25 கிராம் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து அக்குள் பகுதியில் தடவி ஊறிக் குளித்தால் அந்தப் பகுதியில் ரோம வளர்ச்சி குறையும். சருமம் மென்மையாகும். வியர்வை கட்டுப்படும்.

குளி்க்கிற தண்ணீரில் துளசி, வேப்பிலை, லவங்கம் சேர்த்தரைத்த பொடியை கடைசியாக கலந்து குளிக்கலாம். 3 டீஸ்பூன் பார்லி பவுடருடன், அரை டீஸ்பூன் பச்சை கற்பூரத்தைப் பொடித்து, பாலில் குழைத்து அக்குள் பகுதியில் தடவிக் கொண்டு, குளிர்ந்த தண்ணீரில் கழுவினாலும் நாற்றமும் வியர்வையும் கட்டுப்படும்.

Related posts

முகத்தை ஜொலிக்க வைக்க எளிய முறை!…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெள்ளையாக வெள்ளரிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan

கால்களில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்!…

sangika

சரும பராமரிப்பில் விளக்கெண்ணை

nathan

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!!

nathan

வெள்ளையான சருமத்தைப் பெற குங்குமப்பூவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan

சரும சுருக்கங்களுக்கு குட் பை சொல்ல இந்த டிப்ஸ்களை பயன்படுத்துங்க

nathan

உங்க மேனி தகதகனு மின்ன நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

இதோ டிப்ஸ்.!!முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் வீட்டிலேயே பெற.!

nathan