சரும பராமரிப்பு

பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க…

தேவையற்ற ரோமம் போக குப்பைமேனி, வேப்பிலை, விரலிமஞ்சள் மூன்றையும் அரைத்து தேவையற்ற ரோமத்தின் மீது பூச உதிர்ந்து விடும். பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல் பவுடர்-.

பயத்தம் பருப்பு அரை கிலோ, சம்பங்கி விதை 50 கிராம், செண்பகப்பூ 50 கிராம், பொன் ஆவாரம் பூ 50 கிராம், கோரைக்கிழங்கு 100 கிராம்.

இவற்றை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், குளிக்கும் போது இந்தப் பவுடரை குழைத்துப் பூசுங்கள். மெழுகு போல் சருமம் மிளிரும். என் வயது 21. நான் நல்ல நிறமாக இருப்பேன். என் முகத்தில் உதடுகளுக்கு மேல் ரோம வளர்ச்சி அதிகமிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். மஞ்சள் உபயோகித்தும் பலனில்லை. வேறு என்ன தீர்வு? மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஹார்மோன் கோளாறுகள் இருந்தாலும் இப்படி ரோம வளர்ச்சி இருக்கும்.

ஒரு வெற்றிலை, ஐந்து மிளகு, மூன்று பற்கள் பூண்டு சேர்த்து வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரவும். இது உங்கள் மாத விலக்கு சுழற்சியைம் சரியாக்கும். ரோம வளர்ச்சியையும் குறைக்கும். சிலருக்குத் திருமணத்துக்கு முன்பு வரை இருக்கிற ரோம வளர்ச்சி, திருமணத்துக்குப் பிறகு உடலில் நிகழ்கிற ஹார் மோன் மாறுதல்களால் குறையும். உங்களுக்கும் அப்படி நடக்கலாம்.

பயத்தம் பருப்பு மற்றும் கஸ்தூரி மஞ்சளை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சாதாரண மஞ்சள் மாதிரி இல்லாமல் மரத் துண்டு மாதிரி இருக்கும்) அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் காய விட்டுக் கழுவவும். வாரம் மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். மீதி நாட்களில் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். கூடவே திரெடிங் செய்து வரலாம். இவையெல்லாம் ரோம வளர்ச்சியைப் படிப் படியாகக் கட்டுப்படுத்தும். கவலை வேண்டாம்.
how to remove unwanted hair from the face naturally 4 homemade methods of epilation

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button