30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சரும பராமரிப்பு

சருமத்தை சுத்தமாக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக்

முகத்தை தினமும் கழுவி பராமரித்தால், அழுக்குகள் வெளியேறி சுத்தமாகும்.

சருமத்தை சுத்தமாக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக்
சருமத்தில் நாள்தோறும் செல்கள் உருவாவது, இறப்பதும் நடக்கிற விஷயம். இறந்த செல்களை சருமம் தனது துவாரத்தின் மூலம் வெளியேற்றிவிடும். அந்த துவாரம் முழுவதும் தூசி, அழுக்கு படிந்திருந்தால், இறந்த செல்கள் வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். அதனால் தான் சருமம் கடினமாகி, சொரசொரப்புடன், சீக்கிரம் வயதான தோற்றத்தை பெற்று விடுகிறது.

இதற்காக முகத்தை தினமும் கழுவி பராமரித்தால், அழுக்குகள் வெளியேறி சுத்தமாகும். விடாப்படியான இறந்த செல்களை ஸ்க்ரப் மூலம் அகற்றலாம். அவை சருமதில் உள்ளே சென்று அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கும். ஆனால் ஸ்க்ரப் நாம் கடையில் ஏன் வாங்க வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கலாம்.

சாதாரணமாக மஞ்சளும், உப்பும் அழுக்குகளை அகற்றி, முகத்தை பளிச்சிட வைக்கும். சர்க்கரையும் அவைகளுக்கு போட்டியாக சருமத்தை காக்கும். ஆனால் சர்க்கரையை ஸ்க்ரப்பாக உபயோகப்படுத்தி இருப்பீர்கள். அது கருமையையும் அகற்றும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ உங்கள் சருமத்தை அழகாக்கும் சர்க்கரையை கொண்டு செய்யும் பேக்.

கருமையை போக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக் :

தேவையானவை :

சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 சொட்டு
எலுமிச்சை சாறு – 2 சொட்டு

எலுமிச்சை சாறு முகத்திலுள்ள கருமையை போக்கும். சர்க்கரை இறந்த செல்களை அகற்றும். ஆலிவ் ஆயில் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து முகத்தை பொலிவாக்கும்.

ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரையையும், எலுமிச்சை சாறினையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் அதனை முகத்தில் போட்டு மெதுவாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகம் பளிச்சிடும்.

ஃபேஸ் பேக் 2:

சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்

இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் காய விடவும். அதன் பின் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள்.

வாரம் இருமுறை செய்தால், மாசு, மருவெல்லாம் போயே போச்சு. சருமத்தை எப்போதும் சுத்தமாக பராமரிப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

Related posts

பிரசவ தழும்புகளை மறைய வைக்கும் அற்புத மூலிகைகள் !!

nathan

பெண்களே உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் கவனம் செலுத்துபவரா நீங்கள் ?இதை முயன்று பாருங்கள்..

nathan

Tips.. இதை செய்தால் சருமம் பொலிவுபெறும்..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 2 பொருளை வெச்சு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராதாம்…

nathan

உங்க சருமத்தில் ஏற்படும் அலர்ஜிக்கு ஏற்ற கைவைத்தியம் முயன்று பாருங்கள்!!!

nathan

முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? அப்போ இத செய்யுங்கள்!…

sangika

2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

அழகை பேணி காப்பதில் கடலை மா பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

nathan

பெண்களே நகத்தை அழகாக வெச்சிக்க ஆசையா?…

nathan