30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

ஆரோக்கியமான ஓட்ஸ் வெங்காய தோசை

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இப்போது ஒட்ஸ் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆரோக்கியமான ஓட்ஸ் வெங்காய தோசை
தேவையான பொருள்கள் :

ஓட்ஸ் – 3 கப்
தயிர் – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
அரிசி மாவு – 2 ஸ்பூன்
சோள மாவு – 2 ஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* பச்சை மிளகாய் மற்றும் சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வறுத்த ஓட்ஸை போட்டு அதனுடன் சிறிது வெந்நீர், தயிர், அரிசி மாவு, சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் கலவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

* கடைசியாக அதனுடன் நறுக்கிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இதில் கரைத்த மாவை மெல்லியதாக தோசை போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை தயார்.

* இதை அனைத்து விதமான சட்னியுடனோ, வெறும் தோசையாகவோ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Related posts

மட்டன் கிரேவி (தாபா ஸ்டைல்)

nathan

பனீர் பாலக் பரோட்டா

nathan

உருளைக்கிழங்கு மசாலா போளி செய்ய சிரமப்பட வேண்டாம் இதோ……..

nathan

கோதுமை ரவை வெஜிடபிள் புட்டு

nathan

நேந்திரம் பழம் அப்பம்

nathan

இட்லி உப்புமா செய்வது எப்படி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி போண்டா

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் மசாலா நூடுல்ஸ்

nathan

காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan