சிற்றுண்டி வகைகள்

கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்வது எப்படி

கேரமல் கஸ்டர்டு புட்டிங் சாப்பிட ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பால் – 1 லிட்டர்
முட்டை – 4
சீனி – 2 கப்
வெனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – சிட்டிகை

செய்முறை :

* பாலை நன்கு காய்ச்சி அதில் 1 1/2 கப் சீனியைப் போட்டு ஆற வைக்க வேண்டும்.

* 4 முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.

* ஆறிய பின் அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து, அதனுடன் அடித்து வைத்த முட்டைகளையும், உப்பையும் சேர்த்து நன்கு அடித்து பாலில் ஊற்றி கலக்கவும்.

* மீதமுள்ள 1/2 கப் சீனியை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

* சீனி உருகி கோல்டன் ப்ரவுன் கலர் சிரப்பாக மாறும் வரை கரண்டியால் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

* சீனி கேரமல் சிரப்பாக ஆனவுடன் அதனை பேக்கிங் ட்ரேயில் எல்லாப் பக்கமும் படுமாறு ஊற்றவும்.

* கேரமல் சிரப் கெட்டியானவுடன் கலந்து வைத்துள்ள பால் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்ய வேண்டும். இல்லையெனில் ட்ரேயை அலுமினிய foil – ஆல் மூடி ஆவியில் வேக வைக்கவும்.

* மூடவில்லையென்றால் தண்ணீர் புட்டிங்கிற்குள் போய் விடும்.

* நன்றாக வெந்தவுடன் புட்டிங்கை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* பரிமாறுகையில் புட்டிங்கை கவிழ்த்துப் பரிமாறவும். புட்டிங்கின் மேல் பாகத்தில் கேரமல் அழகாக பரவியிருக்கும்.201608130941558988 how to make Caramel custard Pudding SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button