22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
nan 1
சிற்றுண்டி வகைகள்

கீரை புலாவ்

தேவையான பொருட்கள்:
வேக வைத்த பாசுமதி அரிசி சாதம் – 2 கப்,
வேகவைத்த கேரட், பட்டாணி, மக்காச்சோளம் (சேர்த்து) – ஒரு கப்,
பாலக்கீரை – ஒரு கப்,
மிளகாய்த்தூள் – சிறிதளவு,
வெங்காயம் – ஒரு கப்,
பூண்டு – 8 பற்கள்,
பச்சை மிளகாய் – ஒன்று
உடைத்த முந்திரி, சீரகம், நெய் – தலா ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
* வெங்காயம், பாலக்கீரை, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
* வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கீரையைச் சேர்த்து வதக்கவும்.
* இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், பட்டாணி, மக்காச்சோளம், கேரட் சேர்த்து வதக்கி, சாதத்தை சேர்த்து முள்கரண்டியால் கிளறவும்.
* கடைசியாக கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.nan 1

Related posts

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

nathan

சுவையான பன்னீர் பிரட் பால்ஸ்

nathan

வெண் பொங்கல்

nathan

கருவேப்பிலைப் பொடி செய்ய வேண்டுமா.. இதோ…

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் வடை

nathan

வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை

nathan

மினி பார்லி இட்லி

nathan

முட்டை பணியாரம்!

nathan