மருத்துவ குறிப்பு

கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்

கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்
தற்போது திருமணமான உடனே குழந்தைப் பெற்றுக் கொள்ள பல தம்பதியினர் விரும்புவதில்லை. அதற்காக அவர்கள் உறவில் ஈடுபடும் போது கருத்தரிக்காமல் இருப்பதற்கு, பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.இருப்பினும் சில நேரங்களில் அந்த கருத்தடை மாத்திரை சரியாக வேலை செய்யாமல் போவதால், எதிர்பாராதவிதமாக கருத்தரிக்க நேரிடுகிறது. அப்படி கருத்தடை மாத்திரைகளை எடுக்கும் போது கருத்தரித்து இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை பார்க்கலாம்..கருத்தடை மாத்திரை எடுக்கும் போது, திடீரென்று மாதவிடாய் சுழற்சி தாமதமானாலோ அல்லது மாதவிடாய் சுழற்சி ஏற்படாமல் இருந்தாலோ, அதுவும் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதைக் குறிக்கும்.திடீரென்று அடிக்கடி சிறுநீர் கழிக்க ஆரம்பித்தால், கருப்பையில் கருமுட்டை தங்கி பெரிதாகி, சிறுநீர்ப்பையை அழுத்துகிறது என்று அர்த்தம். எனவே இத்தகைய அறிகுறியை சாதாரணமாக நினைக்காதீர்கள்.

கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கும் போது, மார்பகங்களில் வலி எடுக்க ஆரம்பித்தாலோ அல்லது மார்பகங்கள் வீக்கமாக இருப்பது போல் உணர்ந்தாலோ, அதுவும் வயிற்றில் கரு உருவாகியுள்ளதை வெளிப்படுத்தும் ஒரு அறிகுறியாகும்.

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். அப்படி உங்களுக்கு திடீரென்று உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்தால், அதுவும் ஊறுகாய், புளிப்பான உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகரித்தால், அது கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தும் செயலாம்.

Related posts

பற்களை சேதப்படுத்தும் அன்றாட பழக்கவழக்கங்கள்!!!

nathan

மாதவிடாயின் போது வயிறுவலியால் அவதிப்படுகிறீர்களா? சூப்பரா பலன் தரும்!!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல்நலம் காக்கும் நல்லெண்ணெய்யின் பயன்கள்…!

nathan

தலை முதல் கால் வரை அனைவரும் கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டிய உடல்நல பரிசோதனைகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!

nathan

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் ! கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan

மனைவி கோபமாக இருக்கும் போது மெசேஜ் அனுப்பாதீங்க

nathan

சர்க்கரை நோய் வராமல் இருக்க தினமும் இதை சாப்பிட்டாலே போதுமாம்! தெரிஞ்சிக்கங்க…

nathan

தசை நார் கிழிவு தவிர்க்க…

nathan