26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
corn capsicum gravy 18 1458306491
சைவம்

கார்ன் குடைமிளகாய் கிரேவி

இரவில் உங்கள் வீட்டில் சப்பாத்தியா? அதற்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்வீட் கார்ன் மற்றும் குடைமிளகாய் சேர்த்து கிரேவி செய்து சுவையுங்கள்.

இங்கு கார்ன் குடைமிளகாய் கிரேவியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: ஸ்வீட் கார்ன் – 1 கப் (வேக வைத்தது) குடைமிளகாய் – 1/2 கப் (நறுக்கியது) பெரிய வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் – 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் எண்ணெய் – 3 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு… பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) பூண்டு – 5 பற்கள்

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் ஸ்வீட் கார்னை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி 3-4 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும். பின் தனியாக ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாயை சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். அடுத்து மற்றொரு அடுப்பில் உள்ள மசாலாவில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, பிரஷ் க்ரீம் சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அதில் தக்காளி சாஸ் மற்றும் வேக வைத்த ஸ்வீட் கார்ன், குடைமிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி இறக்கினால், கார்ன் குடைமிளகாய் கிரேவி ரெடி!!!

corn capsicum gravy 18 1458306491

Related posts

ஈஸி லன்ச் :(10 நிமிடத்தில் செய்து விடலாம் )

nathan

புளி சாதம் எப்படிச் செய்வது?

nathan

சிம்பிளான… கோவைக்காய் ப்ரை

nathan

சூப்பரான சுவையான கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி?

nathan

கடலைக் கறி

nathan

கத்தரிக்காய் மசியல் : செய்முறைகளுடன்…!

nathan

பூரிக்கு சூப்பரான சைடுடிஷ் வடகறி

nathan

சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்

nathan

சுவையான சேப்பங்கிழங்கு கிரேவி

nathan