31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

பருப்பு முள்ளங்கி வறுவல்

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – 2
கடலைப்பருப்பு – அரை கப்
கொத்துமல்லி, கறிவேப்பிலை -பொடியாக நறுக்கியது
மிளகாய், தனியா, மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
சர்க்கரை – அரை தேக்கரண்டி
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய், பெருங்காயம், கடுகு, சீரகம் – தாளிக்க
உப்பு – தேவையாள அளவு

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் முள்ளங்கியை தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தாளிக்கவும். மேலும் வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உப்பு, மஞ்சள், தனியா, மிளகாய் பொடிகளை சேர்க்கவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் பருப்பு மற்றும் முள்ளங்கியை சேர்த்து வேக வைக்கவும். பின்னர் சர்க்கரை, புளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கவும். இதில் நீங்கள் விரும்பும் எந்த காய்கறியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Related posts

கோவைக்காய் வறுவல்

nathan

வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

காளான் லாலிபாப்

nathan

காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்

nathan

ஃபிரஞ்ச் ஃப்ரை

nathan

மணத்தக்காளி வத்தல் குழம்பு.. அல்சரை நொடியில் விரட்டும் ட்ரை பண்ணி பாருங்க..!!

nathan

சுவையான தீயல் குழம்பு

nathan

பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு

nathan

பட்டாணி குருமா

nathan