29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
ஆரோக்கிய உணவு

இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் காளான்

காளான் குழம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து விடலாம்.

இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் காளான்
தற்போது மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ள காளான், பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது.

தற்போது மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ள காளான், பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத வைட்டமின் ‘டி’ எனும் உயிர்ச்சத்துதான் அதிகம் உள்ளது.

காளான் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதிக ரத்த அழுத்தத்தையும், ரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பையும் தடுக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கிறது.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. காக்காய் வலிப்பு, மூளை நோய், வலிமைக் குறைவு, மஞ்சள் காமாலை, மூட்டு வலி, தலையில் நீர்கோர்த்தல் உள்ளிட்ட பல நோய்களை காளான் கட்டுப்படுத்துகிறது.

அவ்வப்போது காளான் சூப் பருகுவதன் மூலம் பெண்களுக்கு கருப்பைப் பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். தீராத காய்ச்சலுக்கு விரைவில் நல்ல பலனை தரும்.

காளான் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். காளான் சூப் தயாரிப்பதைப் போல காளான் குழம்பும் வைக்கலாம். இதுவும் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும்.

சர்க்கரை நோயாளிகள் காளான் குழம்பு சாப்பிடுவது மிகவும் நல்லது. தாம்பத்திய உறவு பிரச்சனை, முதுமைத் தளர்வு, காய்ச்சல், பாக்டீரியா நோய்கள், நரம்பு வலி உள்ளிட்ட நோய்கள் குணமடையும்.

காளான் குழம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து விடலாம். இதயத்தைக் காத்துக்கொள்ள விரும்புபவர்கள் காளான் குழம்பு அதிகம் சாப்பிடலாம்!

Related posts

கொலஸ்ட்ராலை முற்றிலும் இல்லாதொழிக்கும் நல்லெண்ணைய்…!

nathan

ருசியான பருப்பு போளி செய்ய…!

nathan

காலையில் வெறும் வயிற்றில் முட்டைகோஸ் ஜூஸ் குடிங்க

nathan

சூப்பர் டிப்ஸ் சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கண்டந்திப்பிலி ரசம் ….

nathan

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்! கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய சில சைவ உணவுகள்!!!

nathan

12 நாட்கள் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு நம்ப முடியாத வகையில் மாறிய அதிசய பெண்!

nathan

vellarikka in tamil – வெள்ளரிக்கா

nathan

மல்கோவா மாம்பழத்தின் நன்மைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…வாரத்துக்கு ஒருநாள் இந்த மீனை சாப்பிடுங்க.. உங்களுக்கு எந்த நோயும் எட்டிப் பார்க்காது..!

nathan