30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
ஆரோக்கிய உணவு

சத்து பானம்

தேவையான பொருட்கள் :
கம்பு – 50 கிராம்
ராகி – 50 கிராம்
கோதுமை – 50 கிராம்
பச்சஅரிசி – 50 கிராம்
உளுந்து – 50 கிராம்
பாசிப்பயறு – 50 கிராம்
கொள்ளு – 50 கிராம்
வேர்க்கடலை – 50 கிராம்
முந்திரி – 50 கிராம்
பாதாம் – 50 கிராம்
ஏலக்காய் – 50 கிராம்
ஜவ்வரிசி – 50 கிராம்
மக்காச் சோளம் – 50 கிராம்
கொண்டக்கடலை – 50 கிராம்
பொட்டுக்கடலை – 50 கிராம்

செய்முறை :

• மேலே கூரிய அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுத்து அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில் (அ) மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்து மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும்.
• பிறகு ஒரு பாட்டிலில் கொட்டி வைத்தால் தேவைப்படும் போது பாலில் காய்ச்சி அருந்தலாம்.
சத்துபானம் தயாரிக்கும் முறை :
தேவையான பொருட்கள் :
சத்துமாவு – 2 ஸ்பூன்
பால் – 2 டம்ளர்
தண்ணீர் – 2 டம்ளர்
தேன் – தேவைக்கு

செய்முறை :

• ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.
• கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும். சிறிது நேரத்தில் பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் தேன் சேர்த்து கலக்கி இறக்கவும்.
• அவ்வளவு தான் சுவையான + ஆரோக்கியமான சத்துமாவு மானம் தயார்
குறிப்பு :
வயதானவர்களுக்கு இது மிகவும் நல்லது. சத்துபானம் திக்கா இல்லாமல் கொஞ்சம் தண்ணியா இருக்கட்டும். அதிகம் சூடாக குடிக்கக் கூடாது.

Related posts

ஐஸ்க்ரீம் சாப்பிட்டா பெண்களின் கருவளம் அதிகரிக்குமா? ஐஸ்க்ரீமின் நன்மைகள்!!

nathan

இந்த உணவுகளை சாப்பிடுங்க.. நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்…

nathan

குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடலாமா?

nathan

கர்ப்பிணிப் பெண்களுக்கான சத்தான சமையல்

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை படிப்படியாக குறைக்கும் உணவுகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான 10 காரணங்கள்!

nathan

சர்க்கரை நோய் மற்றும் பெண் மலட்டு தன்மையை போக்கும் நாவல் பழம்

nathan

உடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூ

nathan

மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள்..!

nathan