எளிய முறையில் செட்டிநாடு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
சூப்பரான செட்டிநாடு இறால் குழம்பு
தேவையான பொருட்கள்:
இறால் – 500 கிராம்
வறுத்து அரைப்பதற்கு :
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 2 துண்டு
மிளகு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி – 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் – 2-4
குழம்பிற்கு :
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* இறாலை நன்கு சுத்தம் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அத்துடன் உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
* பின் அதில் இறாலை சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!