28.9 C
Chennai
Monday, May 20, 2024
201702081524211526 Chettinad Potato Green peas fry SECVPF
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்

உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 200 கிராம்
பச்சை பட்டாணி – 1 கப்
பூண்டு – 5 பல்
வெங்காயம் – 2
தக்காளி – 1
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – ருசிக்கு
தனி மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
கரம்மசாலா தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
கொத்தமல்லி – சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் – தேவைக்கு
கடுகு – 1/4 ஸ்பூன்
உ.பருப்பு – 1/2 ஸ்பூன்
சோம்பு – 1/4 ஸ்பூன் + 1/4 ஸ்பூன்

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கு, பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

* பூண்டு, இஞ்சி, 1/4 ஸ்பூன் சோம்பை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த இஞ்சி விழுதை போட்டு கிளறவும்.

* அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

* அனைத்து சேர்ந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல் ரெடி.201702081524211526 Chettinad Potato Green peas fry SECVPF

Related posts

செட்டிநாடு இறால் சுக்கா

nathan

செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு -செய்முறை

nathan

செட்டிநாடு இறால் குழம்பு!

nathan

சளி தொல்லைக்கு இதமான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு

nathan

சுவையான காரமான கத்திரிக்காய் வறுவல்

nathan

செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்

nathan

சூப்பரான செட்டிநாடு இறால் குழம்பு

nathan

சுவையான செட்டிநாடு கோழி உப்பு வறுவல்

nathan

செட்டிநாடு மட்டன் குழம்பு

nathan