என்னென்ன தேவை?
ரவையாக உடைத்த பச்சரிசி – 1 கப்,
(கடலைப்பருப்பு, சிறுபருப்பு ஊறவைத்து உடைத்தது) – தலா ½ கப்,
தேங்காய்த் துருவல் – ½ மூடி,
காய்ந்த மிளகாய் – 6-8,
சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிது,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய்,
கடுகு,
உளுந்து,
கடலைப்பருப்பு,
கறிவேப்பிலை,
நெய் – 1-2 டீஸ்பூன்,
காய்ந்த திராட்சை – 20.
எப்படிச் செய்வது?
அரிசி ரவையை ஊற வைக்கவும். இத்துடன் கடலைப் பருப்பு, சிறு பருப்பு எடுத்து தனித்தனியாக ஊற வைத்து சிறிது உலர்த்தி உடைத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளிக்க எடுத்துவைத்த பொருட்களைத் தாளித்து இத்துடன் சீரகம், காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து உடைத்த அரிசி ரவை, பருப்புகள், உப்பு சேர்த்து உப்புமா மாதிரி வேக விட்டு எடுத்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து அதன் உள்ளே பொடித்த திராட்சையை வைத்து மூடி உருட்டி இட்லி பாத்திரத்தில் வேக விட்டு ஆவியில் எடுத்து சூடாக படைத்து பரிமாறவும். பெருங்காயத்தூள் விருப்பப்பட்டால் சேர்க்கவும்.