சிற்றுண்டி வகைகள்

சத்தான பச்சைப்பயறு துவையல்

பச்சை பயிறை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். இன்று பச்சைப்பயறு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான பச்சைப்பயறு துவையல்
தேவையான பொருட்கள் :

பச்சைப்பயறு – அரை கப்,
பூண்டு – ஒரு பல்,
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
புளி – கோலி அளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

* இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

* வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

* பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

* அனைத்து நன்றாக ஆறியபின் பயறு, உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

* சத்தான பச்சைப்பயறு துவையல் ரெடி.

* சூடான சாதத்தில் இந்த துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ளம் செய்து… அதில் பூண்டு ரசத்தை விட்டு சாப்பிட்டால்… ஆஹா, தேவாமிர்தம்!201701311248018181 green dal thuvaiyal pachai payaru thuvaiyal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button