சிற்றுண்டி வகைகள்

சூப்பரான இட்லி மஞ்சூரியன் செய்முறை விளக்கம்

காலையில் செய்த இட்லி மீந்துவிட்டதா? இந்த மஞ்சூரியனை செய்து பாருங்கள். மாலை நேர டிப்பனுக்கு இந்த இட்லி மஞ்சூரியன் சூப்பராக இருக்கும்.

சூப்பரான இட்லி மஞ்சூரியன் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

இட்லி – 10
மைதா மாவு – 2 ஸ்பூன்
சோள மாவு – 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சோயா சாஸ், தக்காளி சாஸ் – தேவைகேற்ப
எண்ணெய், உப்பு – தேவைகேற்ப

செய்முறை :

* இட்லியை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து இதில் இட்லி துண்டுகளை நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.

* மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்.

* பின்னர் இதனுடன் மிளகாய் தூள், சோயா மற்றும் தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து கிரேவியாக வரும் போது இதில் ஏற்கனவே பொரித்துவைத்த இட்லியை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கினால் சூடான, சுவையான இட்லி மஞ்சூரியன் தயார். 201606020905376689 how to make idli manchurian SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button