27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
fee797fc ef18 4e39 a2eb 6fc7e65b937f S secvpf
மருத்துவ குறிப்பு

பிளாஸ்டிக் டப்பாவில் உணவு சாப்பிட்டால் வழுக்கைத்தலை நிச்சயம்: பகீர் தகவல்

எவர்சில்வர் பாத்திரங்களைவிட கழுவுவதற்கு எளிதாக உள்ளது என பல குடும்பத்தலைவிகள் தங்களது பிள்ளைகளுக்கும், கணவர்களுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுகளை கட்டித் தந்தனுப்புகின்றனர். இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து பற்றி சமீபத்திய ஆய்வின் முடிவு எச்சரித்துள்ளது.

பெங்களூரில் உள்ள பிரபல கிளினிக்கில் முடி உதிர்வு சிகிச்சைக்காக வந்தவர்களில் 430 பெண்கள், 570 ஆண்கள் என மொத்தம் ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ஆய்வில், இவர்களில் 92 சதவீதம் பேரின் ரத்தத்தில் ‘பிஸ்பெனால் ஏ’ (BPA) எனப்படும் பிளாஸ்டிக்கின் சேர்மம் கலந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், வேலைக்கு செல்லும் தரத்தினரான இவர்கள் அனைவரும் அன்றாடம் 4-6 முறை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவு வகைகளை உண்ணும் பழக்கம் உடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளை உண்பதால் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளுடன் இன்னும்பிற பாதிப்புகளும் உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முடி உதிர்வில் தொடங்கி 70 சதவீதம் வளர்சிதை (மெட்டாபாலிஸம்) பிரச்சனைகளுக்கு இதுவே மூல-முதல் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, ‘மைக்ரோ ஓவென்’ மூலம் உணவை சூடுப்படுத்தி, அவற்றை ‘அரக்கப்பரக்க’ பிளாஸ்டிக் டப்பாக்களுக்குள் திணித்து கொண்டு செல்வதால் சமநிலையற்ற சூடுபடுத்தல் காரணமாக அந்த உணவில் உள்ள சில வகை சத்துக்கள் ‘பிஸ்பெனால் ஏ’ (BPA) பாதிப்புக்கு உள்ளாகி விடுகின்றது.

இந்த பாதிப்பினால் முடி உதிர்வு மற்றும் வழுக்கைத்தலை சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிகையும் பெருமளவில் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வின் முடிவு சுட்டிக்காட்டியுள்ளது.fee797fc ef18 4e39 a2eb 6fc7e65b937f S secvpf

Related posts

கோடை காலத்துக்கு அவசியமான மின்சாதன பராமரிப்புகள்

nathan

சுவர்களை அழகாக வைத்துக் கொள்ள என்ன வழி?

nathan

தெரிஞ்சிக்கங்க…நோய்களை விரட்டியடிக்க நம் தமிழர்கள் பயன்படுத்த இந்த பொருளை பற்றி தெரியுமா?

nathan

கரையான் அரிக்கும் மரபொருட்கள்: மாற்றுவழி என்ன?

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..!!

nathan

சரும நோய்களை சமாளிப்பது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றித் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே தீர்வு!

nathan

தெரிந்துகொள்வோமா? கார்டியாக் அரஸ்ட் ஏற்படுவதற்கு முன்னால் தெரியும் அறிகுறிகள்!

nathan