மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? கார்டியாக் அரஸ்ட் ஏற்படுவதற்கு முன்னால் தெரியும் அறிகுறிகள்!

1969 ஆம் ஆண்டு வெளியான துணைவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய குழந்தை தான் ஸ்ரீ தேவி. அதன் பிறகு அடுத்தடுத்து மலையாளம், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி என பல மொழிகளில் கால்பதித்து பிரபலமானார். ஸ்ரீ தேவி பிறந்தது தமிழகத்தில் உள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில். தமிழக கிராமத்தில் பிறந்து பாலிவுட்டை கலக்கிய ஸ்ரீ தேவியின் மரணம் இந்திய சினிமாவிற்கே பெரும் இழப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

திரை நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் அவருக்கான இறுதி அஞ்சலிகளையும் அவருடனான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருக்க சாதரண ரசிகர்களுக்கு அவரத மரணம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ‘கார்டியாக் அரஸ்ட்’ தமிழகம் அவ்வளவு எளிதாக இந்த பெயரை மறந்திருக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார் 75 நாட்கள் தொடர் சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அப்போது சொல்லப்பட்ட காரணம் கார்டியாக் அரஸ்ட் . தற்போது நடிகை ஸ்ரீ தேவிக்கும் அதே சொல்லியிருக்கிறார்கள்.

மாரடைப்பு :

மாரடைப்பிற்கும் கார்டியாக் அரஸ்ட் என்பதற்கும் சில வித்யாசங்கள் இருக்கின்றன. இதயத்திற்கு செல்லும் கரோனரி எனப்படும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத்திற்கு கிடைக்க வேண்டிய ரத்தம் கிடைக்காமல் தடை ஏற்பட்டால் மாரடைப்பு உண்டாகும்.

 

சுயநினைவு :

பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படும் போது, சுயநினைவுடனே இருப்பார்கள். நெஞ்சில் அதீத பாரத்தை வைத்து அழுத்துவது போலவும், கழுத்து, இடது கை மற்றும் தோல்பட்டை ஆகியவை அதிக வலியெடுக்கும்.

அதிகமாக மூச்சு வாங்கும், வியர்த்துக் கொட்டும்

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ கண்காணிப்பிற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய சிகிச்சை கொடுத்தால் உயிர் பிழைக்க வைத்திடலாம், அவர்களுக்கு சிபி ஆர் முறையில் ஆக்ஸிஜன் உடலில் பரவ வைத்திடலாம். அல்லது அவர்களுக்கு டிஃபிப்ரில்லேடர் என்ற எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் கருவி மூலம் சீராக்க முடியும்.

ஏற்கனவே மாரடைப்பு வரும் என்று கணிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி மாத்திரை கூட வழங்கப்படுகிறது.

கார்டியாக் அரஸ்ட் :

இதே கார்டியாக் அரஸ்ட் என்றால் என்ன தெரியுமா? நம்முடைய இதயம் குறிப்பிட்ட கால இடைவேளியில் சீராக துடித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் நம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ரத்தத்தை பம்ப் செய்திடும்.

இங்கிருந்து பம்ப் செய்யப்படும் ரத்தம் நம்முடைய மூளை,நுரையிரல் மற்றும் சிறுநீரகம் என உடலின் அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது.

இயக்கம் நிறுத்தம் :

திடீரென இதயம் தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்ளும். இதனால் மயக்கநிலையை அடைந்து விடுவார்கள். இதயத் துடிப்பு திடீரென உயர்ந்து இயல்பை விட அதிகமாக துடிக்கும் போது தான் கார்டியாக் அரஸ்ட் ஏற்படும்.

இதயம் வேகமாக துடிப்பது,அதாவது தன்னுடைய சக்தியை மீறி துடிப்பது தான் இதயம் செயலிழந்து போவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் உடனடியாக மரணம் நிகழும்.

 

பிழைக்க முடியுமா?

உடலில் சேருகிற கொழுப்பு காரணமாக,சர்க்கரை நோய் காரணமாக ,அதிக ரத்த அழுத்தம்,ஒபீசிட்டி ஆகியவை காரணமாக ஏற்படுவது மாரடைப்பு அதனை நாம் ஒரு நோயாக கருதலாம் ஆனால் கார்டியாக் அரஸ்ட் என்பது ஒரு நோய் கிடையாது. மரணத்திற்கான ஓர் வழி.

இன்னும் சொல்லவேண்டுமானால் திடீரென உயிரிழப்பது தண்ணீரில் மூழ்கி இறப்பது, தூக்கத்தில் அப்படியே இறந்திடுவது, தூக்கிட்டு தற்கொலை போன்ற திடீர் மரணங்கள் அனைத்திற்கும் இந்த கார்டியாக் அரஸ்ட் காரணியாக இருக்கிறது.

நமக்குத் தெரியுமா ? :

ஒருவர் நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறதா அல்லது கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டிருக்கிறதா என்பதை நம்மால் கணிக்க முடியாது.

அதனால் உடனடியாக மிகவும் துரிதமாக அவருக்கு முதலுதவி கொடுக்க வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவுடன் இருக்கும் பட்சத்தில் பலமாக இருமச் சொல்லலாம். தொடர்ந்து இருமச் சொல்லுங்கள். அதே அந்த நபர் மயக்கமடைந்திருந்தால், அவரை சுற்றி காற்றோட்டத்தை அதிகப்படுத்துங்கள் நீங்கள் பதட்டமடையாமல் அவருக்கு சிபிஆர் என்கிற முதலுதவியை கொடுக்க வேண்டும்.

சிபி ஆர் :

இதனை ஏபிசி என வரிசைப்படி மேற்கொள்ள வேண்டும். ஏர்வே ப்ரீத்திங் சர்குலேஷன். பாதிக்கப்பட்ட நபர் சீராக சுவாசம் விடுகிறாரா அல்லது அதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சில நேரங்களில் நாக்கு சுவாசப்பாதையை அடைத்துக் கொள்ளும். அதனால் சுவாசப்பாதை எந்த இடைஞ்சலும் இன்றி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மருத்துவமனை :

சமமான இடத்தில் படுக்க வைத்து விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பு இறுதியில், உங்களது இரண்டு கைகளையும் வைத்து வேகமாக அழுத்த வேண்டும். ஒரு முறை அழுத்தமும் பின் பாதிக்கப்பட்ட நபரின் வாயைத்திறந்து அதில் நீங்கள் ஊதி உள்செலுத்த வேண்டும். இவை ஐந்து நொடி இடைவேளியில் வேகமாக நடக்க வேண்டும்.

இந்த முதலுதவியில் அவர் சுயநினைவினைப் பெற்றாலும் இல்லையென்றால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியம்.

அறிகுறிகள் :

இந்த கார்டியாக் அரஸ்ட் திடீரென நிகழக்கூடியது என்றாலும் அவற்றிற்கும் சில அறிகுறிகள் இருக்கின்றன, ஆனால் அவை பெரும்பாலும் நம்மில் யாருமே பெரிதாக கண்டு கொள்வதில்லை. அதீதமான சோர்வு, தலைச்சுற்றல், மூச்சுத்திணறல்,இதயம் மிக வேகமாக துடிப்பது, எப்போதும் படபடப்பாக உணர்வது , ஆகியவை இதன் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கிறது.

சிலருக்கு நெஞ்சு வலி,நெஞ்சில் பாரம் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படக்கூடும். சிலர் சிறிது நேரம் அமைதியாக இருந்தால் தானாக சரியாகும் என்று நினைத்து பெரும் தவறு இழைத்துவிடுகிறார்கள்.

 

யாருக்கெல்லாம் வரும் ? :

கார்டியாக் அரஸ்ட் திடீரென நிகழக்கூடியது. தூக்கத்திலும் உங்களது உயிரை பறித்துச் செல்லக்கூடியது என்றாலும் யாருக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன என பார்த்தால் அதிகமான ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு, சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு, அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு,உடல் உழைப்பு சிறிதும் இல்லாதவர்களுக்கு,அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button