31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

பிளாஸ்டிக் டப்பாவில் உணவு சாப்பிட்டால் வழுக்கைத்தலை நிச்சயம்: பகீர் தகவல்

எவர்சில்வர் பாத்திரங்களைவிட கழுவுவதற்கு எளிதாக உள்ளது என பல குடும்பத்தலைவிகள் தங்களது பிள்ளைகளுக்கும், கணவர்களுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுகளை கட்டித் தந்தனுப்புகின்றனர். இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து பற்றி சமீபத்திய ஆய்வின் முடிவு எச்சரித்துள்ளது.

பெங்களூரில் உள்ள பிரபல கிளினிக்கில் முடி உதிர்வு சிகிச்சைக்காக வந்தவர்களில் 430 பெண்கள், 570 ஆண்கள் என மொத்தம் ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ஆய்வில், இவர்களில் 92 சதவீதம் பேரின் ரத்தத்தில் ‘பிஸ்பெனால் ஏ’ (BPA) எனப்படும் பிளாஸ்டிக்கின் சேர்மம் கலந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், வேலைக்கு செல்லும் தரத்தினரான இவர்கள் அனைவரும் அன்றாடம் 4-6 முறை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவு வகைகளை உண்ணும் பழக்கம் உடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளை உண்பதால் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளுடன் இன்னும்பிற பாதிப்புகளும் உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முடி உதிர்வில் தொடங்கி 70 சதவீதம் வளர்சிதை (மெட்டாபாலிஸம்) பிரச்சனைகளுக்கு இதுவே மூல-முதல் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, ‘மைக்ரோ ஓவென்’ மூலம் உணவை சூடுப்படுத்தி, அவற்றை ‘அரக்கப்பரக்க’ பிளாஸ்டிக் டப்பாக்களுக்குள் திணித்து கொண்டு செல்வதால் சமநிலையற்ற சூடுபடுத்தல் காரணமாக அந்த உணவில் உள்ள சில வகை சத்துக்கள் ‘பிஸ்பெனால் ஏ’ (BPA) பாதிப்புக்கு உள்ளாகி விடுகின்றது.

இந்த பாதிப்பினால் முடி உதிர்வு மற்றும் வழுக்கைத்தலை சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிகையும் பெருமளவில் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வின் முடிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

தொடர்ந்து விக்கல் வந்தால் அதனை தடுத்து நிறுத்துவது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் இப்படித்தான் தயாராகிறது…

nathan

நோயின் அறிகுறியை வெளிப்படுத்தும் தலைவலி

nathan

வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி!

nathan

தெரிஞ்சிக்கங்க…இளம் வயதிலே மூட்டு வலி வருவதற்கான காரணம் என்ன?

nathan

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இரத்த சோகை

nathan

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பகாலத்தில் தோன்றும் வாந்தியை நிறுத்த சில டிப்ஸ்!.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா?

nathan