19 27 1467020298
சரும பராமரிப்பு

சோடா உப்பு சருமத்திற்கு செய்யும் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சோடா உப்பு சருமம் மற்றும் கூந்தலுக்கு நிறைய நன்மைகளை தருகின்றது. இவற்றிலுள்ள காரத்தன்மை நமது சருமத்தில் உண்டாகும் அமில-காரத் தன்மையை சமன் செய்யும்.

சருமத்தை மிருதுவாக்கும். முகப்பருக்களை குணப்படுத்தும். பொடுகினை தடுக்கும். இறந்த செல்களை அகற்றும். இப்படி சருமத்திற்கும், கூந்தலுக்கும் அழகை சேர்க்கும் சோடா உப்பினால் என்னென்ன நன்மைகள் உண்டாகிறது எனப் பார்க்கலாம்.

சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்கள் சோடா உப்பை உபயோகப்படுத்தும் முன், சிறிது கைகளில் தேய்த்துப் பாருங்கள். அரிப்போ எரிச்சலோ ஏற்படாமலிருந்தால், இதனை உபயோகப்படுத்தலாம்.

பருக்கள் ஏற்படாமலிருக்க : அதிகப்படியான எண்ணெய் சுரப்பதாலும், தொற்றுக்களாலும் உண்டாகும் பருக்கள் முக அழகினை கெடுக்கும். முக்கியமாக பருக்களால் உண்டாகும் தழும்பு எளிதில் போகாது. அவ்வாறு இருந்தால், சோடா உப்பை 2 வாரம் பயன்படுத்தினால் போதும். முகப்பரு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். அதன் தழும்புகளும் காணாமல் போய் விடும்.

கரும்புள்ளிகளை அகற்றும் : முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் முக்கியமாக மூக்கின் ஓரங்களில் வரும் கருமை ஆகியவை முக அழகினை கெடுக்கக் கூடியவை. இவற்றை மிகச் சுலபமாக சோடா உப்பு போக்கிவிடும். ஒரே வாரத்தில் இதனை பூசி வரும்போது, கருமையற்ற தெளிவான முகம் கிடைக்கும்.

வெயிலால் உண்டாகும் கருமை : சிலருக்கு முகம், கை வெயிலால் கருத்து போய் வேறு வேறு நிறமாய் இருக்கும். இந்த கருமை போய், ஒரே நிறமாய் காட்சி அளிக்க வைக்கும் குணம் சோடா உப்பிற்கு உண்டு. வெயிலினால் உண்டாக விடாப்படியான கருமையை சோடா உப்பு உடனடியாக மறைய வைத்திடும்.

நிறம் அளிக்கும் : சோடா உப்பு ஒரு இயற்கையான ப்ளீச்சாகும். இது சருமத்தின் துவாரங்களில் இருக்கும் அழுக்குகளை அகற்று, உள்ளிருந்து நிறத்தினை அதிகரிக்கச் செய்யும்.

ஃபேஸியல் ஸ்க்ரப் : எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இயற்கையான ஸ்க்ரப்பான இந்த சமையல் சோடாவை உபயோகப்படுத்தலாம். வாரம் இருமுறை இதனை உபயோகப்படுத்துவதால், சருமம் சுத்தமாகி, பொலிவான சருமம் கிடைக்கும்.

அலர்ஜியை தடுக்க :
சருமத்தில் உண்டாகும் அரிப்பு, எரிச்சலை சோடா உப்பு குணப்படுத்துகிறது. வீக்கத்தை கட்டுப்படுத்தும். காயங்களை ஆற்றும் குணங்களை கொண்டுள்ள சோடா உப்பு, சருமத்தில் உண்டாகும் அலர்ஜியை சரி செய்கிறது.

19 27 1467020298

Related posts

முகப்பருக்களை விரட்டும் ஆரஞ்சு

nathan

சுருக்கம் நீங்க… இளமை நீடிக்க!

nathan

எந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில் பயன்படுத்தலாம்!!தெரிஞ்சிக்கங்க…

nathan

சிவப்பு சந்தனத்தின் நன்மைகள்

nathan

பிரசவ தழும்புகளை மறைய வைக்கும் அற்புத மூலிகைகள் !!

nathan

இயற்கையாக மேல் உதட்டில் உள்ள முடியை நீக்க 10 எளிய வழிகள்

nathan

பளபளக்கும் சருமத்திற்கான வழியை இங்கே கண்டுபிடிங்க!!

nathan

பெண்களுக்கான சின்ன..சின்ன டிப்ஸ்..

nathan

0 வயது தாண்டிய பெண்களும் ஆண்களும் கூட எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சிகிச்சை,, ஆன்ட்டி ஏஜிங்..

nathan