30.5 C
Chennai
Friday, May 17, 2024
face 1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

இயற்கையாக மேல் உதட்டில் உள்ள முடியை நீக்க 10 எளிய வழிகள்

உங்கள் உதட்டிற்கு மேலே உள்ள முடி அடிக்கடி உங்களை சங்கட படுத்துகிறதா? நீங்கள் பல்வேறு பொருட்களை முயற்சி செய்து பார்த்தும்  ஒரு பயனும் இல்லையா? உதட்டிற்கு மேல் உள்ள முடியானது பெண்களுக்கு உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும், அதை எப்படி நீக்குவது என்பதற்கான தொகுப்பு இல்லை.
எனவே, எப்படி நீங்கள் எப்போதும் உங்கள் மேல் உதட்டில் உள்ள முடியில் இருந்து விலகி இருப்பது? உங்களுக்கு இந்த முடியினை நீக்க கடையில் விற்கும் அதிக விலை மதிப்பு மிக்க பொருட்களை தவிர்த்து வேறு எதாவது உள்ளாதா? சரி, இதற்கென்று உதவ கூடிய சில வீட்டு வைத்திய குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று உங்களுக்கு தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்பட்டு போவீர்கள், மேலும் இவற்றை பயன்படுத்தி எப்படி உங்கள் மேல் உதட்டில் உள்ள முடியினிஅ நீக்குவது என்று நீங்கள் யோசிக்கலாம்? எனவே நீங்கள் கீழே உள்ளதை படிக்கவும்!

பெண்களிக்கு ஏற்படும் தேவையற்ற முடி வளர்ச்சி பற்றி – ஒரு விரிவுரை:
பெண்களுக்கு இருக்கும் அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி அல்லது தேவையற்ற முடி வளர்ச்சிக்கான காரணங்கள் பல உள்ளது, அவை ஒருவேளை ஹார்மோன் சார்ந்ததாகவோ அல்லது மரபணு சார்ந்ததாகவோ, அல்லது இரண்டும் சேர்ந்த கலவையின் காரணாமக கூட இருக்கலாம். பொதுவாக அனைத்து பெண்களில் சுமார் 5-10% பெண்களுக்கு அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி என்பது இருக்கிறது. இதை சரிசெய்யும் உறுதியான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, இதற்கான ஆராய்ச்சி இன்னும் நடந்து வருகிறது (1).
பின்வரும் உங்கள் மேல் உதட்டில் உள்ள‌ முடிகளை நீக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள் சில!

1. மஞ்சள் மற்றும் நீர்:
மஞ்சளானது உதட்டின் மேல் உள்ள முடியை நீக்க உதவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஒரு கிளாஸ் தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி  அளவு ம‌ஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கெட்டியான பேஸ்ட் போல நன்கு கலந்து கொள்ளவும். இதை மேல் உதடு பகுதியில் தாராளமாக தடவவும். அதை அரை மணி அப்படியே உலர‌ விட‌ வேண்டும். இது நன்கு க‌டினமானதும், மெதுவாக தேய்த்து விடவும். பிறகு இதை கழுவவும். இதை 4 வாரங்கள் விடாமல் தொடர்ந்து செய்து வர, நீங்கள் உங்கள் மேல் உதட்டில் முடி குறைவதை பார்ப்பதோடு, புதிதாக வேறு எந்த புதிய முடி வளர்ச்சி இல்லாததையும் உணருவீர்கள்.

2. எலுமிச்சை, சர்க்கரை மற்றும் தண்ணீர்:
இரண்டு எலுமிச்சையை பிழிந்து சாறெடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு நீர் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு மெல்லிய பசை போல ஆகும் வரை கலந்து கொள்ளவும். கலவை தயாரானவுடன் இதை உதட்டின் மேல் பகுதி முழுவதும் தடவுங்கள். 15 நிமிடங்கள் அதை உலர விட்டு பின் தண்ணீர் கொண்டு இதை கழுவ வேண்டும்.

3. முட்டையின் வெள்ளைகரு:
முட்டையின் வெள்ளைக்கரு மேல் உதட்டில் உள்ள‌ முடியினை நீக்க‌ மற்றொரு நல்ல தீர்வாகும். இந்த கலவையை செய்ய, ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு தேக்கரண்டி மாவு, சர்க்கரை இந்த மூன்றையும் சேர்த்து ஒன்றாக கலக்கிக் கொள்ளவும். இந்த கலவையை நன்கு ஒட்டும் பதத்திற்கு கலக்கவும். இது ஒட்டும் பதத்திற்கு வந்தவுடன், இதை மேல் உதட்டின் மேற்புறம் தடவவும். இதை சுமார் 30 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு இதை உரித்து எடுக்கவும். சிறந்த முடிவுகளை பெற, இந்த சிகிச்சை மீண்டும் வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.  ஒரு மாதத்தில் முடி வளர்ச்சி கணிசமாக குறைந்து இருப்பதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள்.

4. விரலி மஞ்சள் மற்றும் பால்:
இதுவும் மேல் உதட்டில் உள்ள‌ முடியினை நீக்க‌ சிறந்த வழிகளில் ஒன்றாகும். பாலுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை ஒரு மென்மையான பேஸ்ட் போல செய்யவும். இதை மேல் உதட்டு பகுதியில் தடவவும். இந்த கலவை நன்கு உலரும் வரை காத்திருக்கவும். பிறகு இது நன்கு காய்ந்ததும் விரல்களால் மெதுவாக நன்கு தேய்த்து எடுக்கவும்.

5. மாவு:
மாவு மேல் உதட்டில் உள்ள‌ முடியினை நீக்க‌ மற்றொரு நல்ல தீர்வாக இருக்கிறது. ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சிறிதளவு மாவுடன் சேர்த்து இதனுடன் சிறிது பால் சேர்த்து கலந்து கொள்ளவும், இது ஒரு கெட்டியான பேஸ்ட் போல ஆகும் வரை நன்கு கலக்கிக் கொள்ளவும். நன்கு கலவை கெட்டியானவுடன் இதனுடன் சிறிதளவு க்ரீம் சேர்க்கவும்.  இதை மேல் உதட்டின் மேற்புறம் முழுவதும் தடவவும். இதை சுமார் 30 நிமிடங்கள் உலர விடுங்கள். இது உலர்ந்த பின், மெதுவாக விரல்களால் நன்கு தேய்த்து எடுக்கவும்..

6. சர்க்கரை:
சர்க்கரையினால் பல பயன்கள் உள்ளன, மேலும் இது தேவையற்ற மேல் உதட்டில் உள்ள‌ முடியினையும்  நீக்க உதவுகிறது. சூடான கடாயில் சில எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். ஒரு நிமிடம் வரை இந்த கலவையை சூடாக்கி பின் ஆறவிடவும். கலவை நன்கு ஆறியவுடன், ஒரு பருத்தி துணி உதவியுடன் மேல் உதட்டின் பகுதி முழுவதும் இந்த கலவையை தடவுங்கள். வட்ட அல்லது நேரியல் இயக்கங்களாக பருத்தி துணியால் தடவிய பின் தேய்க்கவும்.

7. தயிர், கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்:
இந்த கலவை செய்ய, ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தயிர், கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளவும். நீங்கள் இதை ஒரு கெட்டியான பேஸ்ட் போலா ஆகும் வரை  நன்றாக கலக்கிக் கொள்ளவும். இதை மேல் உதட்டின் பகுதியில் தடவி, அதை 15 முதல் 20 நிமிடங்கள் விட்டு உலரும் வரை காத்திருக்கவும். மெதுவாக உலர்ந்த புதியில் தேய்த்து விட்டு பிறகு சிறிதளவு நீர் விட்டு இந்த பகுதியினை துடைக்கவும்.

8. ஹைட்ரோகார்டிசோன் கிரீம்:
இந்த ஹைட்ரோகார்டிசோன் கிரீம் பெரும்பாலும் நாம் வீட்டில் வைத்து இருப்பதில்லை. இருந்தாலும் இந்த ஹைட்ரோகார்டிசோன் கிரீம் மேல் உதட்டில் உள்ள‌ (2) தேவையற்ற முடியை நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

9. நூலிழைகள்:
மற்றொரு வீட்டிலேயே முயற்சிக்க கூடிய‌ தீர்வு த்ரெட்டிங். நூலை கொண்டு மேல் உதட்டின் மேல் உள்ள முடிகளை நூலை குறுக்கு வாட்டில் செய்து கொண்டு நேரெதிராக முடியை பிடுங்கவும். இப்படி செய்வதால் மயிர்க்கால்களை வேரோடு பிடுங்க முடியும். இந்த த்ரெட்டிங் முறையானது வழக்கமாக 10 முதல் 14 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கும் ஒரு தற்காலிக தீர்வாக உள்ளது.

10. கத்தரிக்கோல்:
ஒருவேளை தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு மிக தெளிவான தீர்வு கத்தரிக்கோல் ஆகிறது. இருப்பினும், மேல் உதட்டில் முடியானது  மிகவும் அதிகமாக இருந்தால் ஒரு கத்திரி கொண்டு அவற்றாஇ நீக்குவது மிகவும் கடினமானதாக  இருக்க முடியும்.
இந்த வைத்திய முறைகளை, இன்றே பின்பற்றி மேல் உதட்டு முடிகளில் இருந்து விடுதலை பெறுங்கள்! உங்களுக்கு வேறு எந்த தீர்வாவது தெரியுமா, மேல் உதட்டு முடிகளை நீக்குவதற்கு? அதை நீங்கள் கருத்துக்கள் பிரிவில் எங்களுடன் பகிரவும்!face 1

Related posts

முகத்தில் உள்ள கருமையை நீக்க இனி கிரீம்கள் தேவையில்லை….

sangika

துளசி பேஸ் பேக்கின் நன்மைகள்

nathan

சுருக்கமின்றி முகம் எப்போதும் பளபளப்புடன் மின்ன வேண்டுமா ?

nathan

அழகு டிப்ஸ்… டிப்ஸ்…

nathan

கூந்தல் வளர்ச்சியை தூண்டும் தேங்காய் ஹேர் பேக்

nathan

உங்க சருமம் அழகாவும் பொலிவாகவும் ஹீரோயின் மாதிரி இருக்க.. சூப்பர் டிப்ஸ்

nathan

ஒரே இரவில் முகப்பொலிவை அதிகரிக்கணுமா?

nathan

இதெல்லாம் செய்தால்…. அழகு வரும்… அவர் சொல்வது சரிதானே!

sangika

சிவப்பு சந்தனத்தை எதனுடன் சேர்த்து பேக் போட்டால் என்ன சரும பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.

nathan