31.1 C
Chennai
Monday, May 20, 2024
1502455007 4858
சிற்றுண்டி வகைகள்

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா…!

காலிஃப்ளவரை இதுவரை மஞ்சூரியன் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அதனை பஜ்ஜி போன்று மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டு பாருங்கள். சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – 2 கப்
கடலை மாவு – 1 கப்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
ஒமம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், ஓமம், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடேற்ற வேண்டும். பிறகு வாணலியில் உள்ள எண்ணெய் காய்ந்ததும், அதில் நறுக்கிய காலிஃப்ளவரை மாவில் நன்கு நனைத்து போட வேண்டும்.

பின்பு காலிஃப்ளவரானது நன்கு பொன்னிறமாக வெந்ததும், அதனை எடுத்து, தட்டில் வைக்க வேண்டும். இதே போன்று அனைத்து காலிஃப்ளவரை பொரித்து எடுக்க வேண்டும். சுவையான காலிஃப்ளவர் பஜ்ஜி தயார்.1502455007 4858

Related posts

தனியா துவையல்

nathan

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

ஐந்தே நிமிடங்களில் வெஜிடபிள் சேமியா செய்யலாம்!

nathan

கோதுமை – கேழ்வரகு உருண்டை

nathan

தீபாவளிக்கான சாக்லேட் பர்பி – செய்முறை!

nathan

ரவை கொழுக்கட்டை

nathan

சுவையான… பாசுந்தி ரெசிபி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி

nathan

ரோஸ் லட்டு

nathan