வயதானவர்கள், நீரழிவு நோயாளிகள் இந்த கோதுமை புட்டை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வயதானவர்களுக்கான கோதுமை மாவு புட்டு
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 200கிராம்
ஏலக்காய் – 3
தேங்காய் – அரை மூடி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
* மாவை சலித்து வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்துக் கொள்ளுங்கள்.
* தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளுங்கள்.
* உப்பை தண்ணீரில் கரைத்து மாவில் தெளித்து உதிரியாகப் பிசையுங்கள். தண்ணீர் அதிகமாக ஊற்றினால் மாவு திரண்டுவிடும். சிறிது சிறிதாக தெளித்துப் பிசைய வேண்டும்.
* புட்டுக் குழாயில் எண்ணெய் தேய்த்து முதலில் தேங்காய் துருவல், அடுத்து கோதுமை மாவு, அடுத்து தேங்காய் துருவல் என மாற்றி மாற்றி வைக்கவும்.
* அடுப்பில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
* வாழைப்பழம், பப்படம், வேகவைத்த பச்சைப்பயிறு கலந்தும் பிசைந்து சாப்பிடலாம்.
* நீரழிவு நோயாளிகள், வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் இந்த புட்டு மிகவும் நல்லது. சிறியவர்களுக்கு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.