36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

போளி

என்னென்ன தேவை?

மைதா மாவு – 1 கப்,
உப்பு – 1 சிட்டிகை,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,

பூரணத்திற்கு…

கடலைப் பருப்பு – 1/2 கப்,
பொடித்த வெல்லம் – 1 கப்,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

மைதா மாவில், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிது தளர்வாக சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். 6 முதல் 8 மணி நேரம் வரை இதை சிறிது எண்ணெய் ஊற்றி ஊற வைக்கவும்.

பூரணம் செய்ய…

கடலைப் பருப்பை வாசனை வரும் வரை இளஞ்சூட்டில் வறுத்து, பின் நீரில் கழுவி, 3 முதல் 4 விசில் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பின் பருப்பை ஆற வைத்து, வெல்லம், தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து அரைக்கவும். அரைத்த பூரணத்தை, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.எண்ணெய் தடவிய வாழை இலையின் மீது, மைதா மாவை சிறிய வடை போல் தட்டி, நடுவில் பூரண உருண்டையை வைத்து, எல்லா விளிம்புகளையும் பூரணத்தின் மேல் மூடி, கையால் தட்டி சப்பாத்தி போல் பெரிதாக்கி, சூடான தோசைக் கல்லில் இட்டு இரண்டு புறமும், நெய் விட்டு வேக வைக்கவும்.சுவையான போளி தயார்.

Related posts

வெள்ளரி அல்வா

nathan

கான்ட்வி

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மிளகு போண்டா

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு பூரி

nathan

சுவையைக் கொண்ட மஸ்ரூம் பாப்பர்ஸ்..

nathan

தேங்காய்ப்பால் காலிஃப்ளவர் சப்ஜி

nathan

சுவையான சுண்டல் கிரேவி

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல்

nathan

சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி

nathan