30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
201610191001460317 evening snacks bread cauliflower roll SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் கோபி ரோல்
தேவையான பொருட்கள் :

பிரெட் ஸ்லைஸ் – 10
காலிபிளவர் – 250 கிராம்
குட மிளகாய் – 2
வெண்ணெய் – 2 பெரிய ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3
டொமேட்டோ கெட்ச் அப் – தேவைக்கு
கரம் மசாலா – இரண்டு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு,
மிளகாய் தூள் – 1 சிறிய ஸ்பூன்
பிரெட் ஒட்டுவதற்கான சோள பிளவர் மாவு, தேவையான அளவு தண்ணீர்
எண்ணெய் – பொரிக்க

செய்முறை :

* முதலில் காலிபிளவர், குடமிளகாய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காலிபிளவரை சூடான உப்பு கலந்த நீரில் போட்டு 10 நிமிடம் வைக்கவும்.

* சோள மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டு போல் செய்து வைக்கவும்.

* பிரட்டின் ஓரங்களை வெட்டி வைக்கவும்.

* கடாயில் வெண்ணெய் போட்டு அதில் ப.மிளகாய் போட்டு தாளித்த பின் காலிபிளவர், குடமிளகாய் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் டொமேட்டோ கெட்ச் அப், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

* பிரெட்டை அழகிய ரோலாக உருட்டி அதனுள் கோபி கலவையை வைக்கவும். பின் ஒரப்பகுதியை சோள மாவுகொண்டு ஒட்டி பத்துமுதல் பதினைந்து நிமிடம் காயவைக்கவும். விரும்பினால் பிரிஜ்ஜிலும் வைக்கலாம்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஒவ்வெரு ரோலாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* இவ்வாறு பொரித்து எடுத்ததை குழந்தைகள் விரும்பும்படி டிசைன் டிசைனாக வெட்டி, டொமேட்டோ கெட்ச் அப்போ, அல்லது கார சட்னியுடனோ பறிமாறலாம்.201610191001460317 evening snacks bread cauliflower roll SECVPF

Related posts

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

nathan

தினை மிளகு பொங்கல்

nathan

சிம்பிளான. சீஸ் மக்ரோனி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

nathan

சிதம்பரம் கொத்சு

nathan

உளுந்து வடை

nathan

மொறு மொறுப்பாக காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி

nathan

சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி

nathan

கம்பு தோசை..

nathan