29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
சிற்றுண்டி வகைகள்

மழைக்கேற்ற வாழைப்பூ வடை

தற்போது மழைக்காலம் அதனால் சுவையான வாழைப்பூ வடை சமைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 1 கப்
கடலைப்பருப்பு – 2 கப்
உளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடி
சோம்பு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் – 1/2 லிட்டர்

தயார் செய்து கொள்ள வேண்டியவை:

1. வாழைப்பூவில் உள்ள நரம்பு போன்ற பகுதியை அகற்றி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.

2. கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

3. ஊறிய பருப்பை மிக்ஸ்யில் போட்டு வடை பதத்தில், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையுடன் வாழைப்பூ, வெங்காயம், சோம்பு, உப்பு, பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி, புதினா சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும். மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

Related posts

சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் பக்கோடா

nathan

தேங்காய்-ரவா புட்டு

nathan

அச்சு முறுக்கு

nathan

கேரளா உன்னி அப்பம்

nathan

மாலை நேர நொறுவை! – பிரெட் போண்டா

nathan

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

nathan

மாலை நேர டிபன் இடியாப்ப பிரியாணி

nathan

மரவள்ளிக் கிழங்கு புட்டு

nathan