34.2 C
Chennai
Monday, Jul 20, 2026
இனிப்பு வகைகள்

குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடா

குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். எப்படி என்று கீழே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடா
தேவையான பொருட்கள் :

பால் – 1 லிட்டர்
பட்டர் – 2 ஸ்பூன்
சீனி – 1 கப்
கார்ன் ஃப்ளார் – 11/2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா பருப்பு – 25
பாதாம் பருப்பு – 10

செய்முறை :

* பிஸ்தா பருப்பை தின் ஸ்லைசுகளாக துருவிக் கொள்ளவும்.

* பாதாம் பருப்பை இரண்டாக நறுக்கி வைக்கவும்.

* ஒரு அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்கத் தொடங்கியதும் அடுப்பைக் குறைத்து வைக்கவும். பால் முழுவதும் சுண்டி ஏடு வர ஆரம்பிக்கும் சமயம் சீனியைப் போடவும்.

* சீனி கரைந்ததும் கார்ன் ஃப்ளாரைப் போட்டு நன்கு கிளறவும்.

* நன்கு கெட்டியான பதம் வரும் போது பட்டரை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி உருண்டைகள் பிடித்து அதன் மேல் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பை தூவினால் அருமையான தூத்பேடா தயார்.

Related posts

தேன்குழல் அல்லது ஜிலேபி (50 துண்டுகள்)

nathan

சுவையான சாக்லெட் புடிங்

nathan

30 வகை ஈஸி ரெசிபி!.

nathan

கலந்த சத்து மாவு பர்பி

nathan

நுங்குப் பணியாரம்

nathan

சுவையான மாம்பழ லட்டு ரெடி…

sangika

nathan

ஹயக்ரீவ பண்டி

nathan

தினை அதிரசம்

nathan