1450506295 6436
இனிப்பு வகைகள்

பலாப்பழ அல்வா

தேவையான பொருட்கள்:

பலாப்பழம் – 25
நெய் – 100 கிராம்
முந்திரி – 10
ஏலக்காய்த் தூள் – 6
திராட்சை – 10
சர்க்கரை – 250 கிராம்
பச்சரிசி மாவு – 1/4 கப்
சோள மாவு – 2 டீஸ்பூன்
பால் – 1/4 லிட்டர்
உப்பு – தேவைக்கேற்ப

தயார் செய்து கொள்ளவேண்டியவை:

பலாபழத்தை வேக வைத்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

அரிசி மாவு, சோள மாவு தனித்தனியாக வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் இரண்டு மேஜை கரண்டி சோள மாவு, கால் கப் அரிசி மாவு மற்றும் இதனுடன் பால் சேர்த்து கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

செய்முறை:

ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய்விட்டு கலந்து வைத்துள்ள பால் கலவை சேர்த்து நன்றாக 15 நிமிடம் பொறுமையாகக் கிளறவும். பிறகு கொஞ்சம் நெய் சேர்த்து பிசைந்து வைத்துள்ள பலா சுளையை சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கிளறவும்.

பின்னர் தேவையான சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கிளறவும். பிறகு ஏலக்காய்த்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும். பிறகு வறுத்து எடுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை போட்டு பரிமாறவும்.

1450506295 6436

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் வேர்க்கடலை வெல்ல லட்டு

nathan

கோதுமைப் பால் அல்வா

nathan

கேரட் ஹல்வா

nathan

சுவையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

nathan

வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி

nathan

சுவையான பாதாம் பர்ஃபி

nathan

வெல்ல பப்டி

nathan

குழந்தைகளுக்கு பிடித்தமான பீட்ரூட் அல்வா

nathan

ரவா லட்டு செய்வது எப்படி

nathan