30.2 C
Chennai
Sunday, May 18, 2025
ld1976
மருத்துவ குறிப்பு

40 வயதில் பெண்களை தொடரும் பல்வேறு பிரச்சனைகள்

மெனோபாஸ் நிலையை நோக்கி பெண்கள் பயணிக்கும் காலகட்டம். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை இந்த வயதில் வரலாம் என்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தற்போது அதிகரித்துவரும் நுகர்வுக் கலாச்சாரத்தில், தவறான வாழ்வியல் முறையைப் பின்பற்றுவதால் 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு, உடல் நலம் மற்றும் மனநல பிரச்னைகள் வரத்தொடங்குகின்றன.

35 வயதைத் தாண்டிய பெண்கள், தங்கள் உடலின்மீது அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை. வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பதால் வைட்டமின் டி கிடைக்காது. உடற்பயிற்சி இன்மை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், தொடர்ந்து டி.வி பார்ப்பது போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கும். தனிமை உணர்வும் தலை தூக்கும்.

‘வீட்டு வேலை செய்யும் இயந்திரமாக மட்டுமே இந்தக் குடும்பத்துக்கு இருக்கிறோமோ?’ என்ற வருத்தம், கணவனுடன் ஏற்படும் பிரச்நனைகளால் மன அழுத்தமும் வரும். மன அழுத்தம் காரணமாக சர்க்கரை நோய், சர்க்கரை நோய் காரணமாக மன அழுத்தம் எனச் சுழற்சியாகத் தொடர்வதால், ரத்த அழுத்தம், இதய நோய்கள், நரம்பியல் பிரச்சனைகள், ஸ்ட்ரோக் ஆகிய உடல் உபாதைகளும் உடன் சேர்ந்துகொள்கின்றன.

வேலைக்குச் செல்லும் பெண்கள், காலை உணவைத் தவிர்ப்பதும், மதியம் குறைவாகச் சாப்பிடுவதும், இரவில் அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதும் வழக்கமாகிவிட்டன. இதனால், வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது. எலும்புகள் தேய்மானம் அடையும். இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பிரச்நனைகள் வரும். அல்சைமர் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

மேலும், இந்த வயதினர் மெனோபாஸுக்கு முந்தைய நிலையில் இருப்பதால், மனநலக் குழப்பங்களும் சேர்ந்துகொண்டு பெண்களைப் பாடாய்ப்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க, உடற்பயிற்சி, சத்தான உணவுகள், வாழ்வியல் மாற்றம் ஆகியவை மூலம் பெண்கள் 40 வயதில் ஏற்படும் அவதியைத் தவிர்க்க முடியும்.
ld1976

Related posts

உங்கள் துணை காதலில் எப்படிப்பட்டவர் என்பதை தெரிஞ்சுக்க இத மட்டும் கவனிச்சா போதும்!

nathan

ஊமத்தை மூலிகை

nathan

கண்களைப் பாதிக்கும் ஒளிர்திரை!

nathan

செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்

nathan

முடியாது என எதுவுமில்லை! உலகில் முதன்முறையாக மூன்று பெற்றோருக்கு பிறந்த ஒரு குழந்தை!

nathan

கணவன் மனைவி பிரிவால் குழந்தை நிலை என்னவாகிறது தெரியுமா?

nathan

எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் அதிகம் பகிருங்கள்

nathan

கூகுள்ளின் புதிய முயற்சி ஆபத்தில் முடியுமா ? 20 மில்லியன் பாக்டீரியா தொற்றுள்ள கொசுக்களை பரப்பவுள்…

nathan

தாய் மற்றும் மனைவிக்கு பிடித்த மாதிரி எப்படி நடந்துகொள்வது உங்களுக்குத் தெரியுமா?

nathan