26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201610051438311413 Evening Snacks puffed rice chat SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் பொரி சாட் மசாலா

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பொரி சாட் மசாலா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

மாலை நேர ஸ்நாக்ஸ் பொரி சாட் மசாலா
தேவையான பொருட்கள் :

பொரி – 1 கப்
ஓமப் பொடி 1 கப்
வெங்காயம், தக்காளி தலா – 1
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
சாட் மசலா – 1 டீஸ்பூன்

சாட் மசாலா செய்ய :

சீரகம், தனியா, மாங்காய்த் தூள் – தலா கால் கப்
கருப்பு உப்பு, மிளகு – தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8

செய்முறை :

* சாட் மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்றாக வெயிலில் காயவைத்து அரைத்தெடுத்தால் சாட் மசலா தயார்.

* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பொரியை போட்டு அதனுடன் சாட் மசாலா, ஓமப் பொடி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

* சூப்பரான பொரி சாட் மசாலா தயார்.

* இதை சாப்பிடும் போது தான் செய்ய வேண்டும். முதலிலேயே செய்து வைத்து விட்டால் நமத்து விடும். 201610051438311413 Evening Snacks puffed rice chat SECVPF

Related posts

அசால்ட்டாக செய்யலாம் அதிரசம்!

nathan

பிரெட் க்ராப்

nathan

சூப்பரான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan

சுவையான உருளைக்கிழங்கு வடை

nathan

முப்பருப்பு வடை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி

nathan

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

nathan

சூப்பரான துவரம்பருப்பு இட்லி உப்புமா

nathan

இஞ்சித் தொக்கு

nathan