30.8 C
Chennai
Monday, May 20, 2024
e84acc4c f849 40d5 8e7d 8913c0455f10 S secvpf
உடல் பயிற்சி

டைனமிக் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

உடற்பயிற்சிக்கு முன்பு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அவசியம். இது, தசைகளை விரிவாக்குகிறது. தசைகளுக்குத் திடீரென கடினமான பயிற்சிகளை அளித்தால், அவை பாதிக்கப்படலாம். இதைத் தவிர்க்க, உடலைத் தயார்படுத்துவதுதான் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள். கழுத்து, தோள்பட்டை, கை, கால், இடுப்பு என, ஒவ்வொரு பகுதித் தசைகளையும் தயார்ப்படுத்தும் பயிற்சிகளைப் பார்க்கலாம்.
நெக் மொபிலைசேஷன் (Neck mobilization) : நேராக நின்று, கழுத்தை வலதுபுறமிருந்து இடமாக, பின்னர், இடமிருந்து வலமாகச் சுழற்ற வேண்டும். இப்படி 10 முறை செய்ய வேண்டும்.
2. ஷோல்டர் ரொட்டேஷன் (Shoulder rotation) : கைகளைப் பக்கவாட்டில் மடித்து, விரல்களைத் தோள்பட்டைமீது வைக்க வேண்டும். இரு கைகளையும் 10 முறை சுழற்ற வேண்டும்.
3. ஷோல்டர் பிரேசிங் (Shoulder bracing) : கைகளை மடித்து, முன்பக்கம் விரல் நுனிகள் படும்படி வைக்க வேண்டும். இப்போது, இரண்டு கைகளையும் முடிந்த வரை பின்னோக்கி இழுத்து நெஞ்சை முன்னே கொண்டுவர வேண்டும். பின்னர், பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, 10 முறை செய்ய வேண்டும்.
4. ஷோல்டர் ஸ்ட்ரெச் (Shoulder stretch) : இடது கையை வலது புறம் நீட்ட வேண்டும். அதை, வலது கையால் பிடித்து முடிந்த வரை இழுக்க வேண்டும். இதே நிலையில் ஐந்து முதல் 10 விநாடிகள் இருக்க வேண்டும். இதேபோல் வலது கைக்கும் செய்ய வேண்டும்.e84acc4c f849 40d5 8e7d 8913c0455f10 S secvpf

Related posts

உடற்பயிற்சியில் நடைபயிற்சி சிறந்தது

nathan

பின்னழகை அழகாக்கும் பயிற்சி

nathan

நரம்புகளை வலுவக்கும் நௌகாசனம்

nathan

சிக்கென்ற இடை தரும் சில யோகாசனங்கள்(beauty tips in tamil)

nathan

குதிகால் வலியை போக்கும் எளிய உடற்பயிற்சி

nathan

கை மற்றும் மணிக்கட்டுப் பயிற்சி

nathan

தேவையற்ற கொழுப்புகள் கரைக்கும் ஸ்வஸ்திக் ஆசனம்

nathan

வயிறு தொடர்பாக பிரச்சனைகளுக்கு

nathan

இடுப்பு மற்றும் முதுகு எலும்பை உறுதிப்படுத்தும் ஸ்விஸ் பந்து பயிற்சி

nathan