35.2 C
Chennai
Friday, May 16, 2025
201609191008525497 thinai rice vegetable rice SECVPF
சைவம்

சுவையான திணை அரிசி வெஜிடபிள் சாதம்

திணை அரிசி மிகவும் சத்து நிறைந்தது. இதில் காய்கறிகளை சேர்த்து எப்படி சத்தான திணை அரிசி வெஜிடபிள் சாதம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சுவையான திணை அரிசி வெஜிடபிள் சாதம்
தேவையான பொருட்கள் :

திணை அரிசி – 150 கிராம்
தண்ணீர் – 2 1/2 குவளை
காலி ஃப்ளவர் துண்டுகள் – 75 கிராம்
ப்ரோக்கோலி துண்டுகள் – 75 கிராம்
பச்சை பட்டாணி – 25 கிராம்
வெங்காயம் – 2 நடுத்தர அளவு
தக்காளி – 3 நடுத்தர அளவு
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 2 சிட்டிகை
எலுமிச்சை – 1/2 துண்டு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
புதினா இலைகள் – சிறிதளவு
இஞ்சி – 1/2 இன்ச்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
பிரியாணி இலை – 1
உப்பு – சுவைக்கு

செய்முறை :

* காய்கறிகள், வெங்காயம், கொத்தமல்லி, புதினா, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* வாணலியில் திணை அரிசியை போட்டு 5 நிமிடம் வறுத்த பின் அரிசியைக் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி அதனுடன் சில துளிகள் எண்ணெய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும். குக்கர் முதல் விசில் வந்ததும், தீயை மிதமான சூட்டிற்கு குறைக்கவும். பின் 8 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். குக்கரில் ஆவி போன பின்னர், 10 நிமிடங்கள் கழித்து சாதத்தை முள் கரண்டியால் கிளறி விட்டு, சாதத்தை தனியே வைக்கவும்.

* காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலியை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் நீரை வடிகட்டி, காய்கறியை தனியே வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்த பின் இஞ்சி துருவல், வெங்காயம் புதினா போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் ஊற வைத்த காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலியை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

* இப்பொழுது பச்சை பட்டாணியை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி முக்கால் பங்கு வேக வைக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி பின்னர் பொடித்த மிளகு தூள் எலுமிச்சம் சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்கி ஏதாவது ஒரு வகை ராய்தாவுடன் பரிமாறவும்.

* சுவையான சத்தான திணை அரிசி வெஜிடபிள் சாதம் ரெடி.

குறிப்பு :

இதே செய்முறையில், சாமை, வரகு மற்றும் குதிரைவாலி அரிசி வகைகளை பயன்படுத்தியும் சமைக்கலாம்.201609191008525497 thinai rice vegetable rice SECVPF

Related posts

சம்பா கோதுமை வெஜிடபிள் பிரியாணி

nathan

சீரக சாதம்

nathan

நூல்கோல் குழம்பு

nathan

ஓமம் குழம்பு

nathan

சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி

nathan

பொரிச்ச குழம்பு பலாக்கொட்டை, முருங்கைக்காய்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான காரமான காளான் மஞ்சூரியன்

nathan

சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி

nathan

தேங்காய் பால் பட்டாணி பிரியாணி

nathan