30.2 C
Chennai
Sunday, May 18, 2025
sl3710
சைவம்

லோபியா (காராமணி கறி)

என்னென்ன தேவை?

வெள்ளை காராமணி – 1 கப்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
(வெங்காயம் – 1,
தக்காளி – 1,
இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு பல் – 4,
மல்லித்தழை – சிறிது அனைத்தையும் பொடியாக நறுக்கவும்),
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

காராமணியை லேசாக வறுத்து 2 மணி நேரம் ஊற வைத்து சுத்தப்படுத்தி வைக்கவும். பின் குக்கரை காய வைத்து நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, இத்துடன் பொடித்த பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் வதக்கி அது வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கியபின் ஊறிய காராமணி சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு 2 முதல் 3 விசில் வந்ததும் இறக்க வேண்டும். அதன்மேல் 1 டீஸ்பூன் நெய், மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். இந்த கிரேவியை ரொட்டி, நாண், புல்காவுடன் பரிமாறலாம்.sl3710

Related posts

தக்காளி குழம்பு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு – 65

nathan

கடலை புளிக்குழம்பு

nathan

குடைமிளகாய் சாதம்

nathan

சப்பாத்தி உப்புமா

nathan

தேங்காய்ப் பால் சாதம்

nathan

பேபி உருளைக்கிழங்கு கறி

nathan

மாங்கா வத்தக் குழம்பு

nathan

வாழைப்பூ குருமா

nathan