32.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
9c6699b2 63fb 4fa5 a7dc ad565346b431 S secvpf
சைவம்

கோவைக்காய் துவையல்

தேவையான பொருட்கள் :

கோவைக்காய் – 200 கிராம்
தேங்காய் துருவல்- தேவைக்கு
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 4 பற்கள்
பச்சைமிளகாய் – 3
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை:
9c6699b2 63fb 4fa5 a7dc ad565346b431 S secvpf
• வெங்காயம், கோவைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• வாணலியில் எண்ணெய் ஊற்றி கோவைக்காயை நன்கு வதக்கவும். வெந்து வரும்போது நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் போன்றவைகளை கலந்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்குங்கள்.

• மறுபடியும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி ஆகியவைகளை சேர்த்து வதக்குங்கள்.

• இதனை நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் இட்டு பொடித்து, அத்துடன் ஆறவைத்துள்ள கோவைக்காய், தேங்காய் துருவலை கலந்து, உப்பும் சேர்த்து அரையுங்கள்.

• இதை சூடான சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு சுவையாக சாப்பிடலாம்.

Related posts

பேபி கார்ன் பனீர் பிரியாணி

nathan

புதினா சாதம்

nathan

அல்சரை சரிசெய்யும் மணத்தக்காளி கீரை கூட்டு

nathan

சேனைக்கிழங்கு சாப்ஸ்

nathan

பனீர் பிரியாணி

nathan

பாகற்காய்க் கறி

nathan

சென்னா பன்னீர் கிரேவி

nathan

பல கீரை மண்டி

nathan

பீட்ரூட் ரைஸ்

nathan