ஆரோக்கிய உணவு

சத்தான வெஜிடபிள் கேழ்வரகு அடை

கேழ்வரகு மிகவும் சத்து நிறைந்தது. கேழ்வரகில் காய்கறிகளை சேர்த்து அடை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

சத்தான வெஜிடபிள் கேழ்வரகு அடை
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 150 கிராம்.
உளுந்து – 50 கிராம்,
கேரட், வெங்காயம் – தலா ஒன்று,
முட்டைக்கோஸ் – 25 கிராம்,
இஞ்சி, பூண்டு – சிறிதளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
குடைமிளகாய் – ஒன்று
உப்பு – சிறிதளவு

செய்முறை :

* கேரட், முட்டைக்கோஸை துருவிக்கொள்ளவும்.

* கொத்தமல்லி, கறிவேப்பிலை, குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக சிறிதாக நறுக்கவும்.

* கேழ்வரகு மாவை வடை மாவுப் பதத்தில் நீரில் கலக்கி, துருவிய காய்கறிகள், உப்பு சேர்த்து கலக்கி அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும்.

* முந்திரி, வேர்க்கடலை சேர்த்தும் செய்யலாம். இதுபோல் முருங்கைக் கீரை+கேழ்வரகு மாவு கலந்து முருங்கைக்கீரை மிக்ஸ் கேழ்வரகு அடை செய்யலாம்.

குறிப்பு: ஏதாவது ஒரு காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை என கலந்தும் அடை வகைகளைச் செய்யலாம். வழக்கமான சைடு-டிஷ் சேர்த்துச் சாப்பிடலாம். தனியாகச் சாப்பிட்டாலும் அருமையான சுவை கிடைக்கும்.201607251205595508 how to make Vegetable ragi adai SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button