31.4 C
Chennai
Saturday, Jun 1, 2024
aaa
ஆரோக்கியம் குறிப்புகள்

சுளீர் வெயில்… பெருகும் வியர்வை… என இந்தக் கோடையைச் சமாளிக்க சில பாரம்பரியப் பொருட்கள் நமக்கு உத…

சுளீர் வெயில்… பெருகும் வியர்வை… என இந்தக் கோடையைச் சமாளிக்க சில பாரம்பரியப் பொருட்கள் நமக்கு உதவும். சுடும் வெயிலில் இருந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் நலனையும் பாதுகாக்கும் பொருட்கள் இங்கே…

நன்னாரி சிரப்

உடல் வெப்பம் தணிய சிறந்த மூலிகை நன்னாரி. வெயில் காலத்தில் வரும் நோய்களான நீர்க்கடுப்பு, மூலச்சூடு, வெட்டைச்சூடு, பித்தம் அதிகரித்தல் ஆகிய பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வு. தினமும் பருக ஏற்ற பானம் இது. சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

aaa

தண்ணீர் குவளை

குளிர்சாதனப் பெட்டியில் வைத்த நீரைக் குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை. இயற்கையான முறையில் ‘சில்’ என்ற நீரைக் குடிப்பதால், வெயில் காலத்துக்கு இதமாக இருக்கும். அதற்கான பிரத்யேகக் குவளை இது. பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலைப் பயன்படுத்தாமல், மண்ணால் ஆன ஜக்கில் தண்ணீரைப் பிடித்து, சில மணி நேரங்கள் வைத்திருந்து குடிக்கலாம்.

சீயக்காய்த் தூள் (250 கிராம்)

‘சீயக்காயைக் காயவைத்து, அரைத்துக் குளிக்க நேரம் இல்லை’ என்று சொல்வோருக்குச் சிறந்த மாற்று. வெயில் சூட்டைத் தணிக்க, வாரம் இருமுறை எண்ணெய்க் குளியலுக்கு இந்த சீயக்காய்த் தூளைப் பயன்படுத்தலாம். கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.

bbb

நாட்டுச்சர்க்கரை (1/2 கிலோ)

பிரதான இனிப்பு சுவையூட்டியாக இருந்தது. வாதம் மற்றும் செரிமானப் பிரச்னைகளைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. அடிக்கடி தொண்டை வலி, தொற்று ஏற்படாமல் தடுக்கும் திறன் இந்த நாட்டுச்சர்க்கரைக்கு உள்ளது.

கருப்பட்டி (பனை வெல்லம்) (1/2 கிலோ)

ஆயுர்வேத மருந்துகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது பனைவெல்லம்தான். வாதம், பித்தம் நீங்கும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொல்லைகள் அருகில் வராது. உடல் உஷ்ணம், நீர்க்கடுப்புக்கு பனை வெல்லத்தால் தயாரிக்கப்பட்ட பானம் சிறந்த மருந்தாக அமையும்.

ccc

வெட்டி வேர்

வெட்டி வேர் இருந்தால் வெயிலைச் சுலபமாகச் சமாளிக்கலாம். வெட்டி வேர் மணப்பாகு, சர்பத் எனப் பல வகைகளில் வெட்டி வேரைப் பயன்படுத்த முடியும். மேலும், கூந்தல் எண்ணெய், பருக்கள் நீங்க, தழும்புகள் மறைய என அழகு தொடர்பான பிரச்னைகளுக்கும் மருந்தாகும்.

மூலிகைக் குளியல் பொடி (100 கிராம்)

வியர்வை துர்நாற்றத்தைப் போக்கும். தினசரி குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். எந்தவித ரசாயனமும் இல்லாததால், அலர்ஜியை ஏற்படுத்தாது. வியர்க்குரு, சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கும்.

ddd

பேபி சோப் – ரூ.55

குழந்தைகளின் மிருதுவான சருமத்தைப் பாதுகாக்க, இயற்கை சோப்பைப் பயன்படுத்தினால் நல்லது. இதில், பாதாம் எண்ணெய், பழங்கள் மற்றும் காய்கறிகள் எக்ஸ்ட்ராக்ட் இருப்பதால், சருமத்துக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கும்.

Related posts

குழந்தைகளுக்கு வரும் அலர்ஜியும்… இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

முயன்று பாருங்கள்..தொடைப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான சதையை குறைக்க..

nathan

திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை -மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

nathan

எவ்வாறு நோய்களில் இருந்து காத்து கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்!…

sangika

ஹேர் மாஸ்க் உங்க அனைத்து முடி பிரச்சனைகளை சரிசெய்யுமாம்!இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

அதிகரித்துவரும் இந்த உடல்பருமன் சாதாரண விஷயம் கிடையாது. இந்த சமூகம் இதை உணர்ந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடில்

nathan

அதிகமாக வியர்ப்பது ரொம்ப நல்லது

nathan

நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அவ்வபோது மருதாணி வைத்துக்கொள்வதால் என்ன பயன்கள்…?

nathan

இந்த 5 ராசிக்காரங்க விஷத்தை விட ஆபத்தானவங்க…

nathan