மாலை நேர சிற்றுண்டிக்கு இந்த கடலை மாவு போண்டா சூப்பராக இருக்கும். இதை செய்வதும் மிகவும் எளிமையானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சுவையான கடலை மாவு போண்டா
தேவையான பொருட்கள் :
கடலைமாவு – 1 கப்,
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
சோடா மாவு – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், சோடா மாவு, மிளகாய் துள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கட்டியான மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவு தளர்வாக இருந்தால் சிறிது அரிசி மாவு, கடலை மாவை சேர்த்து கொள்ளலாம்.
* கடாயில் எண்ணெயை சூடானதும் கடலை மாவு கலவையை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான போண்டாவை சூடாக பரிமாறவும். இதற்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.