27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D1
ஆரோக்கிய உணவு

சத்து பானம்

தேவையான பொருட்கள் :
கம்பு – 50 கிராம்
ராகி – 50 கிராம்
கோதுமை – 50 கிராம்
பச்சஅரிசி – 50 கிராம்
உளுந்து – 50 கிராம்
பாசிப்பயறு – 50 கிராம்
கொள்ளு – 50 கிராம்
வேர்க்கடலை – 50 கிராம்
முந்திரி – 50 கிராம்
பாதாம் – 50 கிராம்
ஏலக்காய் – 50 கிராம்
ஜவ்வரிசி – 50 கிராம்
மக்காச் சோளம் – 50 கிராம்
கொண்டக்கடலை – 50 கிராம்
பொட்டுக்கடலை – 50 கிராம்

செய்முறை :

• மேலே கூரிய அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுத்து அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில் (அ) மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்து மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும்.
• பிறகு ஒரு பாட்டிலில் கொட்டி வைத்தால் தேவைப்படும் போது பாலில் காய்ச்சி அருந்தலாம்.
சத்துபானம் தயாரிக்கும் முறை :
தேவையான பொருட்கள் :
சத்துமாவு – 2 ஸ்பூன்
பால் – 2 டம்ளர்
தண்ணீர் – 2 டம்ளர்
தேன் – தேவைக்கு

செய்முறை :

• ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.
• கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும். சிறிது நேரத்தில் பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் தேன் சேர்த்து கலக்கி இறக்கவும்.
• அவ்வளவு தான் சுவையான + ஆரோக்கியமான சத்துமாவு மானம் தயார்
குறிப்பு :
வயதானவர்களுக்கு இது மிகவும் நல்லது. சத்துபானம் திக்கா இல்லாமல் கொஞ்சம் தண்ணியா இருக்கட்டும். அதிகம் சூடாக குடிக்கக் கூடாது.%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

Related posts

ரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன் பெஸ்ட்?

nathan

படிங்க இது தெரிந்தால் இனிமேல் வெங்காயத்தோலை குப்பையில் போடமாட்டீர்கள்..!

nathan

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்

nathan

நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.

nathan

தினம் 3 உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

சுவையான அட்டகாசமான எள் ரசம் செய்வது எப்படி ??

nathan

சிக்கன் கோலா உருண்டை குழம்பு செய்ய…!

nathan

ஆண்மையை அதிகரிக்கும் வால்நட்

nathan

காய்கறிகளை பார்த்து வாங்குவது எப்படி?

nathan