32.6 C
Chennai
Friday, May 16, 2025
201607131117114269 Strengthens the front thigh standing quad
உடல் பயிற்சி

முன் தொடையை வலிமையாக்கும் பயிற்சி

தொடையை வலிமையாக்கும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

முன் தொடையை வலிமையாக்கும் பயிற்சி
பயிற்சிகள் ஐஸோடானிக், ஐஸோமெட்ரிக் என்று இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பயிற்சியின்போது குறிப்பிட்ட நிலையில் நிறுத்தி, தசைகளுக்கு இறுக்கம் தந்து வலு சேர்ப்பது ஐஸோமெட்ரிக். இது முன் தொடையை வலிமையாக்கும்.

தசைக்கும் மூட்டுக்கும் தொடச்சியாக அசைவு கொடுத்து வந்தால் அது ஐஸோடானிக். இது பின் தொடையை வலுப்படுத்தும். இந்தப் பயிற்சிகளை சாப்பிட்ட ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு செய்வதே நல்லது. காரணம், உண்ட பின்பு ஒன்றரை மணி நேரம் வரை நமது உடல் உணவைச் செரிக்கவே முக்கியத்துவம் கொடுக்கும்.

விரிப்பில் நேராக நிற்க வேண்டும். வலது முழங்காலைப் பின்புறம் மடக்கி, வலது கையால் கணுக்காலைப் பிடித்தபடி 10 முதல் 30 நொடிகள் அப்படியே நிற்க வேண்டும். தேவைப்பட்டால், மற்றொரு கையை சுவரில் ஊன்றிக்கொள்ளலாம். இடது, வலது காலுக்கு என முறையே 15 முதல் 20 தடவை செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் ஒற்றை காலில் நிற்பது சற்று கடினமாக இருக்கும். அப்போது சுவற்றை பிடித்து கொள்ளலாம். நன்றாக பழகிய பின்னர் சுவற்றை பிடிக்காமல் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சிகளை இடது, வலது என இரண்டு பக்கமும் செய்ய வேண்டும்201607131117114269 Strengthens the front thigh standing quad

Related posts

தொப்பையை குறைக்கும் லையிங் லெக் ரைஸ் பயிற்சி

nathan

ஒவ்வொரு ஆசனத்தையும் எத்தனை முறை செய்ய வேண்டும்

nathan

மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

இதயத்திற்கு நலன் தருவது ஓட்டமா? நடையா?

nathan

காஃபின் க்ரஞ்சஸ் பயிற்சி

nathan

கால்கள், இடுப்புக்கு வலிமை தரும் பத்ம சயனாசனம்

nathan

தொப்பை குறைய 4 வழிகள் !

nathan

உங்களுக்கு தெரியுமா யோகாவை தொடர்ந்து செய்து வந்தால் என்னென்ன நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்…!

nathan

கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான கெகல் பயிற்சி !!

nathan