25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
11 cleaning indian
ஆரோக்கியம் குறிப்புகள்

வீட்டை கிருமிகளிடமிருந்து சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?

நீங்கள் உங்கள் வீட்டில் சரியான கவனம் கொள்ளவில்லை என்றால் அது கிருமிகளின் புகலிடமாக மாறலாம். எனவே உங்கள் வீட்டைத் தூய்மையுடன் வைத்துக் கொள்ள, வீட்டை கிருமிகளின்றி சுத்தமாக வைப்பது அவசியம்.

அதற்கு வீட்டை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஒருசில இடங்களில் கவனம் செலுத்தி நன்கு கழுவ வேண்டும். சரி, இப்போது வீட்டை கிருமிகளற்றதாக்க நீங்கள் செய்ய வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போம்.
11 cleaning indian
வீட்டில் அழுக்குத் துணிகள் நீண்ட நேரத்திற்கு போட்டு வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது நீங்கள் முதன் முதலில் செய்ய வேண்டிய வேலை. அதற்கு குறைந்தது இரு நாளைக்கு ஒரு முறையாவது துணிகளைத் துவையுங்கள். அதோடு உங்கள் வாஷிங் மெஷினையும் சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதை செய்ய சிறந்த வழி உள்ளங்கையளவு ப்ளீச்சிங் அல்லது சுத்தம் செய்யும் பவுடரை அதில் போட்டு சில நிமிடம் ஓட விடுங்கள். இது அதில் சேர்ந்துள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும்.

* மற்றுமொரு பிரச்சனை அழுக்கான டவல்கள். அவற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை துவைத்து வெந்நீரில் அலசி கிருமிகளைப் போக்குங்கள்.

* வீட்டில் உள்ளோர் அனைவரும் தனித்தனி டவல்களை பயன்படுத்துங்கள். வாரம் ஒருமுறை மெத்தை உறைகளை மாற்றுங்கள். மெத்தையில் அமர்ந்து உண்பதை அனுமதிக்காதீர்கள். இது எறும்பு மற்றும் புழுக்களை ஈர்க்கும்.

* வீட்டில் உள்ளோர் அனைவரும் தனித்தனி டவல்களை பயன்படுத்துங்கள். வாரம் ஒருமுறை மெத்தை உறைகளை மாற்றுங்கள். மெத்தையில் அமர்ந்து உண்பதை அனுமதிக்காதீர்கள். இது எறும்பு மற்றும் புழுக்களை ஈர்க்கும்.

* சிறிய வேக்யூம் கிளீனர் கொண்டு கம்ப்யூட்டர் கீபோர்டை சுத்தம் செய்யுங்கள். அதில் இருந்து வெளியேறும் கிருமிகளைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

* சமையலறையில் உள்ள பாத்திரம் கழுவும் இடமும் கிருமிகள் வளரும் ஒரு இடமாதலால் அதை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். உங்கள் சமையலறை மேடைக்கும் இது பொருந்தும்.

* உங்கள் குளியலறையை தினமும் சுத்தம் செய்வதும் மிக மிக அவசியம். ஏனெனில் கிருமிகள் வளரும் வாய்ப்பு அங்கும் அதிகம்.

சுத்தம் செய்வது எப்படின்னு தெரிஞ்சிடுச்சில்ல? அப்புறமென்ன.. தொடங்குங்க..

Related posts

உங்களுக்கு தெரியுமா இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்வதை தடுக்க என்ன செய்யலாம்?

nathan

பெண்களே! ‘இந்த’ விஷயங்கள மட்டும் தப்பி தவறிக்கூட உங்க கணவனிடம் சொல்லாதீர்கள்…

nathan

மாரடைப்பை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் அளவை ஈஸியா குறைக்க…இந்த பானங்கள நீங்க குடிக்கணுமாம்!

nathan

பெண்களே தொரிந்துகொள்ளுங்கள்….எந்தெந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கணும் தெரியுமா?

nathan

உடலில் இப்படி அறிகுறிகளை தென்பட்டால் அலட்சியப்படுத்தாதீர்கள்…!கட்டாயம் இதை படியுங்கள்

nathan

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்

nathan

அதிக பிஸ்கட் சாப்பிடுவது ஆபத்து : பெற்றோர்களே கவனம்

nathan

உங்களுக்கு தெரியுமா.. பாகற்காய் விதையில் உள்ள அற்புத பலன்கள்.!

nathan

பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் பெண்கள் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல.

nathan