28.6 C
Chennai
Monday, May 20, 2024
25 1435220077 mutton rogan josh
அசைவ வகைகள்

ரமலான் ஸ்பெஷல்: காஷ்மீரி ரோகன் ஜோஷ்

காஷ்மீரி ஸ்டைல் ரெசிபிக்கள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதோடு, சற்று காரமாகவும் இருக்கும். அதிலும் மட்டன் மற்றும் தயிர் கொண்டு செய்யப்படும் ரெசிபியான ரோகன் ஜோஷ் செய்வதற்கு ஈஸியாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.

மேலும் இது ரமலான் மாத நோன்பின் போது செய்து சாப்பிட ஏற்றதாக இருக்கும். சரி, இப்போது காஷ்மீரி ரோகன் ஜோஷ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1 கிலோ மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் பச்சை ஏலக்காய் – 2 கருப்பு ஏலக்காய் – 2 பட்டை – 1 கிராம்பு – 4 மிளகு – 1 டீஸ்பூன் சோம்பு – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது) தயிர் – 1/2 லிட்டர் பூண்டு – 6 (தட்டியது) பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, பச்சை மற்றும் கருப்பு ஏலக்காய், கிராம்பு, சோம்பு, மிளகு, பெருங்காயத் தூள் போன்றவற்றை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் மட்டனை சேர்த்து, அத்துடன் உப்பு, பூண்டு, மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில், மசாலா மட்டனுடன் ஒன்று சேர நன்கு வேக வைக்க வேண்டும். பிறகு அதில் தயிரை நன்கு அடித்து ஊற்றி, உப்பு சுவை பார்த்து, மட்டனை நன்கு மூடி வைத்து வேக வைத்து இறக்கினால், காஷ்மீரி ரோகன் ஜோஷ் ரெடி!!!

25 1435220077 mutton rogan josh

Related posts

ரம்ஜான் ஸ்பெஷல்: கப்ஸா சோறு

nathan

சுறா புட்டு செய்ய…!

nathan

மட்டன் சுக்கா செய்வது எப்படி?

nathan

முருங்கைக்கீரை முட்டை பொரியல்

nathan

ஆந்திரா சாப்பல புலுசு (மீன் குழம்பு)

nathan

மெக்சிகன் சிக்கன்

nathan

வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

nathan

மீன் கட்லட்,

nathan

சிக்கன் சுக்கா : செய்முறைகளுடன்…!​

nathan