chukka
அசைவ வகைகள்

சிக்கன் சுக்கா : செய்முறைகளுடன்…!​

தேவையான பொருட்கள் :

வேக வைக்க:
சிக்கன் – அரை கிலோ
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
மிளகாய் பொடி – அரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
தாளிக்க:
கிராம்பு – இரண்டு
பட்டை – ஒன்று
சீரகம் – அரை தேக்கரண்டி
வரமிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – பாதி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
தக்காளி – பாதி
பொடி வகைகள்:
மல்லி பொடி, மிளகாய் பொடி – தலா அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
கரம் மசாலா – கால் தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவைக்கு
செய்முறை :
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்

வேக வைக்க கொடுத்துள்ள பொருட்களை தனியே வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாசனை பொருட்கள், காய்ந்த மிளகாய், சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து மஞ்சள் பொடி போட்டு வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

சிக்கன் வெந்ததும் தனியே வடித்து எடுத்து வாணலியில் மற்ற பொருட்களுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும்.

பொடி வகைகளை சேர்த்து, தண்ணீர் தெளித்து கிளறி எடுக்கவும்.

சுவையான, சிக்கன் சுக்கா ரெடி
chukka

Related posts

வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி

nathan

எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது.

nathan

சுவையான சிக்கன் பெப்பர் ப்ரை

nathan

பஞ்சாபி சிக்கன்

nathan

ஆத்தூர் மட்டன் மிளகு கறி

nathan

கோழி ரசம்

nathan

முட்டை பெப்பர் ஃபிரை

nathan

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த கெளுத்தி மீன்

nathan

தேங்காய்ப்பால் இறால் குழம்பு

nathan