36.7 C
Chennai
Thursday, May 30, 2024
1533205109 7684
அசைவ வகைகள்

சுறா புட்டு செய்ய…!

தேவையான பொருட்கள்:

சுறா மீன் – 250 கிராம்
தண்ணீர் – 2 டம்ளர்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 14 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி, பூண்டு – கால் கப் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 5
மிளகு தூள் – 1 தேக்கரண்டி.
செய்முறை:

சுறா மீனை தோல் நீக்கி சுத்தம் செய்து 2-3 துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு மீன் முழுகும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். 2 விசில் வந்ததும் இறக்கி விடலாம். பின்னர் நீரை வடி கட்டி மீன் துண்டுகளை எடுத்து தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து பின் பொடியாக நறுக்கி பூண்டுமற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து பொடியாக ந்றிக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

அத்துடன் உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து மசாலா நன்கு மீனில் சேரும் வரை நன்கு கிளற் வேண்டும். நன்கு உதியாக வந்ததும் மிளகுத்தூள் கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவி கிளறி விட்டு இறக்கினால் சுவையான கார சாரமான சுறா புட்டு தாயார்.

குறிப்பு: தேவைப்பட்டால் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும். மற்றொன்று சுறாவை குக்கரில் வேகவைக்காமல் பாத்திரத்திலும் வேகவைக்கலாம்.1533205109 7684

Related posts

சைடிஷ் பட்டர் சிக்கன் கிரேவி

nathan

சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன்

nathan

இறால் பிரியாணி

nathan

சூப்பரான சில்லி சிக்கன் குழம்பு

nathan

இறால் ப்ரை &கிரேவி

nathan

அசத்தும் சுவையுடன் மட்டன் புலாவ்

nathan

இரும்புச்சத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை முட்டை பொரியல்

nathan

சன்டே ஸ்பெஷல்: சிக்கன் குழம்பு

nathan

ஆட்டிறச்சிக் குழம்பு

nathan