25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
25 1422163071 11acorus calamus
ஆரோக்கியம் குறிப்புகள்

மூட்டைப் பூச்சிகளை விரட்ட அட்டகாசமான சில வழிகள்!!!

வேலைப்பளு மிக்க நாளுக்கு பின் நமக்கு கிடைக்கும் சொர்க்கம் என்ன தெரியுமா? நம் பஞ்சு மெத்தையில் நமக்கு கிடைப்பது சுகமான தூக்கம் மட்டுமே. ஆனால் அந்த தூக்கத்தின் மீது மண்ணை போடும் புண்ணியவான் ஒன்று உள்ளது. அது தான் நம் அனைவருக்குமே சிம்ம சொப்பனமாக விளங்கும் மூட்டைப் பூச்சிகள். குறிப்பாக அவைகள் உங்கள் படுக்கையில் வந்து விட்டால் அவ்வளவு தான்! அதற்கு பிறகு எங்கே தூங்குவது. உங்கள் உடலில் அது அனைத்து இடங்களிலும் கடிக்கும். இதனால் பாதிக்கப்பட்ட இடங்களில் அரிப்பு, சொறி மற்றும் கொப்புளங்கள் உண்டாகும். உங்கள் படுக்கையில் ஊடுருவும் அந்த சின்னஞ்சிறிய அரக்கர்கள் பற்றிய நினைப்பு வந்து விட்டாலே போதும், உங்கள் தூக்கம் பறி போய், இரவு முழுவதும் கொட்ட கொட்ட விழித்து கொண்டிருப்பீர்கள்.

மூட்டைப் பூச்சிகள் என்பது நழுவக்கூடிய வகையில் இருப்பதால், பொதுவாகவே அதனை நீக்குவதற்கான வீட்டு சிகிச்சைகள் முதலில் வெற்றியடையாது. ஆனால் மூட்டைப் பூச்சிகளை விரட்டுவது அவ்வளவு கஷ்டமா என நீங்கள் கேள்வி எழுப்பலாம். இப்படி யோசிங்களேன்! ஒரு பெண் மூட்டைப் பூச்சி தன் வாழ்நாளில் 500 முட்டைகளை இடும். இந்த 500 மேலும் பெருகி, வளர்ந்து கொண்டே போகும். தலைமுறைகளாக உற்பத்தியாகி பெருகி கொண்டிருக்கும் இந்த மூட்டைப் பூச்சிகள் தொற்றுகளாகி விட்டது. இதனால் இந்த பிரச்சனையை சரியான நேரம் பார்த்து கையாளுவது மிகவும் முக்கியமாகும்.

இந்த பூச்சிகளை நீக்க கஷ்டப்படுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. உணவருந்தாமல் இந்த பூச்சிகளால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும். அதனால் அவைகள் உயிருடன் வாழ உணவு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. வாழ்வதில் அவைகளுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லாததால், உணவு இல்லாத காரணத்தால் அவைகள் இறந்து போவதில்லை. சரி, மூட்டைப் பூச்சிகளை நீக்க நமக்கு கை கொடுக்கும் சில மூலிகை வீட்டு சிகிச்சைகளைப் பற்றி பார்க்கலாமா?

புதினா

புதினா இலைகளின் வாசனை என்றால் மூட்டைப் பூச்சிகளுக்கு ஆவதில்லை. அதனால் அவைகளை நீக்க இதனை பயன்படுத்தலாம். கொஞ்சம் புதினா இலைகளை எடுத்து, நீங்கள் தூங்கும் பகுதியில் வைத்துக் கொள்ளவும். குழந்தை தூங்கும் தொட்டிலிலும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம். மூட்டைப்பூச்சிகள் விரட்டியாக இந்த புதினா இலைகள் செயல்படும். உங்களுக்கு தோதாக இருந்தால், உங்கள் சருமத்தின் மீதும் கொஞ்சம் இலைகளை தேய்த்துக் கொள்ளலாம்.

மிளகாய் பொடி

சிவப்பு மிளகாய் பொடி சிறந்த மூட்டைப்பூச்சி விரட்டியாக அமைந்துள்ளது. இந்த பொடியை பூச்சிகள் ஒழிந்திருக்கும் இடங்களில் தூவி விடுங்கள்.

லாவெண்டர்

லாவெண்டர் வாசனை இருக்கும் இடங்களில் மூட்டைப் பூச்சிகளால் வாழ முடிவதில்லை. அதனால் லாவெண்டர் பெர்ஃப்யூமை பயன்படுத்துங்கள் அல்லது உடைகளின் மீது லாவெண்டர் செடியின் இலைகளை தேய்த்துக் கொள்ளவும்.

ரோஸ்மேரி

லாவெண்டர் போலவே ரோஸ்மேரி வாசனையையும் மூட்டைப்பூச்சிகளால் தாங்கி கொள்ள முடிவதில்லை. ரோஸ்மேரி ஸ்ப்ரேவை பயன்படுத்தியும் மூட்டைப் பூச்சிகளை நீக்கலாம்.

யூகலிப்டஸ்

மருத்துவ குணங்கள் போக, மூட்டைப்பூச்சிகளை நீக்கும் குணங்களையும் யூகலிப்டஸ் கொண்டுள்ளது. தூங்கும் பகுதிகளில் சிறிது யூகலிப்டஸ் எண்ணெய்யை தெளித்து விடவும். யூகலிப்டஸ் எண்ணெயுடன் சிறிதளவு ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் எண்ணெய்களையும் சேர்த்துக் கொண்டு, அதனை கொண்டும் மூட்டைப்பூச்சிகளை விரட்டலாம்.

பீன்ஸ் இலைகள்

மூட்டைப்பூச்சிகளை விரட்ட இயற்கை கொடுத்துள்ள பரிசு தான் பீன்ஸ் இலைகள். பூச்சிகளை விரட்ட பழமையான காலம் முதல் இந்த இலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போதைய மக்களுக்கு இதன் பயன்கள் தெரிவதில்லை. இந்த இலைகள் மூட்டைப்பூச்சிகளை ஒழிக்கும் என புதிய ஆராய்ச்சி ஒன்று உறுதி செய்துள்ளது. இந்த இலைகளில் உள்ள ரோமங்கள் இந்த பூச்சிகளை கொல்ல உதவுகிறது.

கருப்பு வால்நட்

தேநீர் தேநீர் தயார் செய்ய இதவும் கருப்பு வால்நட் மரத்தில் பூஞ்சை எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி தாக்கங்கள் உள்ளதால், மூட்டைப்பூச்சிகள் பிரச்சனையை கையாள இதனை பயன்படுத்தலாம். பயன்படுத்தப்பட்ட கருப்பு வால்நட் மரத்தின் தேநீர் பைகளை வீட்டின் அனைத்து பகுதிகளிலும் வைத்து விடவும். இது மூட்டைப்பூச்சிகளையும் அதன் முட்டைகளையும் கொன்று விடும். உங்கள் செல்லப் பிராணிகளுக்கு அருகில் இந்த பைகளை வைக்காதீர்கள்.

டீ ட்ரீ ஸ்ப்ரே

டீ ட்ரீ மரத்தின் அதிமுக்கிய எண்ணெய் அதன் நுண்ணுயிர்க் கொல்லி தாக்கங்களுக்காக அறியப்படுபவை. பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற அனைத்து வகையான நுண்ணிய உயிரினங்களை நீக்க இது உதவும். இந்த குணத்தினாலேயே வீட்டில் உள்ள மூட்டைப்பூச்சிகளை விரட்ட இதை பயன்படுத்துகின்றனர். 1 பாட்டில் டீ ட்ரீ அதிமுக்கிய எண்ணெய்யை வாங்கிக் கொண்டு அதில் தண்ணீர் கலந்து நீர்த்து போகச் செய்யவும். இந்த மூலிகை நீரை ஸ்ப்ரே பாட்டில் ஒன்றில் அடைத்து, அதை உங்கள் வீட்டின் சுவர்கள், படுக்கைகள், அலமாரிகள், திரைகள், ஃபர்னிச்சர்கள், மெத்தைகள், ஆடைகள் மற்றும் அனைத்து பொருட்களின் மீதும் ஸ்ப்ரே செய்யவும். ஒரு வாரம் முழுவதும் இதனை தினமும் செய்தால் மூட்டைப்பூச்சிகள் தொல்லைகள் நீங்கும்.

வேப்ப எண்ணெய்

இந்தியாவின் வட பகுதிகளில் அதிகமாக காணப்படும் வேப்ப மர இலையில் இருந்து தயாரிக்கப்படுவதே வேப்ப எண்ணெய். மூட்டைப்பூச்சிகள் உட்பட பல நுண்ணிய உயிரினங்களை அழிக்க, நுண்ணுயிர் எதிர்ப்பி செயல்களுக்காக நன்றாக அறியப்படும் இந்த மரம் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மருந்து கடைகளிலும் வேப்ப எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெய்யை நீர்த்து போக செய்யாமல் அதன் தூய்மையான வடிவத்திலேயே பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் இதனை ஸ்ப்ரே செய்யுங்கள். அதே போல் இந்த மூலிகை எண்ணெய்யை உங்கள் டிடர்ஜென்ட்டுடன் கலந்து உங்கள் ஆடைகளை தவிக்கவும். இதனை ஒரு வாரத்திற்கு தினமும் செய்யவும்.

தைம்

தைம் என்பது புகழ்பெற்ற இத்தாலிய மூலிகையாகும். உணவுகளுக்கு சுவைமணம் அளிக்கவும், இனிமையான வாசனையை அளிக்கவும் இது முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகை மூட்டைப்பூச்சிகளின் மீது நேரடியாக செயல்படாது. ஆனால் இதன் வாசனை அவைகளுக்கு வெறுப்பூட்டும் வகையில் இருக்கும். இதனால் இடத்தை அதுவாகவே காலி செய்து விடும். நற்பதமான தைம் இலைகளை வலை பைகளில் போட்டு கொள்ளவும். இந்த பைகளை வீட்டின் மூலை முடுக்குகளில் போடவும்; மெத்தைகளுக்கு கீழ், அலமாரிகளுக்கு கீழ், சோஃபா குஷன்களுக்கு கீழ், திரைகளுக்கு அருகில். இதனால் மறைந்திருக்கும் இடங்களை விட்டு மூட்டைப்பூச்சிகள் தானாகவே ஓடி விடும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்த வலை பை சிகிச்சையை தொடரவும்.

வசம்பு (Sweet Flag)

ஸ்வீட் ஃப்ளாக் என அழைக்கப்படும் மூலிகையான வசம்பை ரசாயனம் சார்ந்த பூச்சிக்கொல்லியில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த மூலிகையில் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் அடங்கியுள்ளதால் மூட்டைப்பூச்சிகள், புழுக்கள் மற்றும் பேன் முட்டைகள் போன்ற நுண்ணுயிர்களை எதிர்த்து இந்த மூலிகை சிறப்பாக செயல்படும். உங்கள் தோட்டத்திற்கான பொருட்களை விற்கும் கடைகளில் இந்த மூலிகை பூச்சிக் கொல்லி கிடைக்கிறது. ஒரு பெரிய பாக்கெட் வசம்பு பொடியை வாங்கி, அந்த பாக்கெட்டில் உள்ள வழிகாட்டல் படி, அதனை நீருடன் கலந்து கொள்ளவும். இந்த பூச்சிக்கொல்லியை வீட்டில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் ஸ்ப்ரே செய்யவும். இதனால் மூட்டைப்பூச்சிகள் முழுமையாக நீங்கும். இதனை உட்கொள்ள வேண்டாம்.25 1422163071 11acorus calamus

Related posts

மாரடைப்பு… மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

nathan

தெரிந்துகொள்வோமா? பனம்பழத்தில் பல் துலக்கலாமா?…

nathan

சிறந்த லட்சியங்களை அடைய குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள்

nathan

முதுமையும் மன ஆரோக்கியமும்

nathan

உச்சக்கட்ட பேரதிர்ஷ்டம்! 2023 வரை பணமழையில் 3 ராசிகள்

nathan

வீட்டில் செல்லப் பிராணிகளால் துர்நாற்றமா? அதைப் போக்க இதோ உங்களுக்கான டிப்ஸ்…

nathan

உட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்?… அப்போ இந்த நொறுக்குத்தீனியை தொட்டுக் கூட பார்த்திடாதீங்க..

nathan

பீட்ரூட் தீர்க்கும் நோய்கள்!…

nathan

சுற்றுச்சூழல் மாசுபாட்டில், சில குறிப்பிட்ட வாயுக்களின் வெளிப்பாடினால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்!!!

nathan