ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு இந்த பேஸ்ட் மட்டும் வாங்கித் தராதீங்க…

பச்சிளம் குழந்தைகளுக்கு பால் பற்கள் வளரத் தொடங்கும் முன்பே, பெற்றோர்கள் அதற்கான முறையான பாரமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். நாம் ஒரு மரத்தை நடும்போது, அந்த மரத்தின் உறுதி மற்றும் நிலைத்த தன்மைக்காக, எவ்வாறு மண்ணில் ஊன்றி வளரும் வேர்களுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அவ்வாறே குழந்தைகளுக்கு பால் பற்கள் வளர தொடங்கும் முன்பே, அவர்களின் ஈறுகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் தர வேண்டும். இது தான் எதிர்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் உறுதியான பற்கள் வளர உதவி செய்யும்.

பால் பற்கள்

பால் பற்கள் தற்காலிகமானது தானே, அது எப்படியும் விழுந்துவிடுமே என்று பாரமரிப்பில் அலட்சியம் காட்டக்கூடாது. ஏனெனில் நிலையான பற்களுக்கு, பால் பற்கள் தான் அடித்தளமாக அமைகின்றது. குழந்தைகள் உணவை சவைக்கவும், அழகாக பேசவும், இந்த பால் பற்கள் உதவி செய்யும்.

பல் துலக்கும் முறை

பிறந்த குழந்தைகளுக்குப் பாலூட்டிய பிறகு, நமது விரலை பயன்படுத்தி அவர்களின் ஈறுகளை தேய்த்து சுத்தம் செய்யலாம். ஒரு சுத்தமான துணியை நனைத்து ஈரமாக்கி, பின்னர் அதை கொண்டு குழந்தைகளின் ஈறுகளை சுத்தம் செய்யலாம். இது பாக்டீரியாக்கள் வளர்வதை தடை செய்யும். ஆனால் பயன்படுத்தும் துணி மென்மையாக இருக்க வேண்டும். இதே போன்று குழந்தைகளின் நாக்கையும் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யலாம். பாலூட்டிய பிறகு அல்லது குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் முன் இதை செய்வது சிறந்தது.

பழக்கப்படுத்துதல்

குழந்தைகளுக்கு பல் துலக்கும் பழக்கத்தை, ஆரம்பத்திலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு இரண்டு வயது தொடங்கும் முன்னே, இதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு பல் துலக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுக்கும் போது, அவர்கள் மிக சரியாக அதை செய்ய வேண்டும் என்றோ, அல்லது முழுமையாக அவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்றோ எதிர்பார்க்கக் கூடாது. ஒரு விளையாட்டு போல் கற்றுக் கொடுக்க வேண்டும். பிரஸ் அல்லது நீர் கொண்டு விளையாட அனுமதிக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு பல் தேய்ப்பது என்பது கஷ்டமான செயலாக தோன்றாது. பிடித்த ஒன்றாக மாறிவிடும். தினமும் காலையில் எழுந்ததும் அவர்களாகவு பிரஷ்ஷை எடுத்துக் கொண்டு போவார்கள்.

பிரஷ் தேர்வு செய்யும் முறை

குழந்தைகளுக்காக பிரஸ் தேர்ந்தெடுக்கும் போது, மென்மையான சிறிய முகப்பு உள்ள பிரஸை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் எந்த அசௌகரியங்களும் இல்லாமல் குழந்தைகளின் வாய்க்குள் இந்த பிரஸ்கள் எளிதாக செல்லும்.

டிசைன்

நீளமான கைப்பிடி கொண்ட பிரஸ் பயன்படுத்துவது சிறந்தது. (குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான பிரஸ்கள் இப்போது பல்வேறு வடிவங்களில் பழங்கள், கார்ட்டூன் வடிவங்கள் என வந்துவிட்டன.அவற்றில் அவர்களுக்கு எது பிடிக்கும் என்று குட்டு வாங்கிக் கொடுங்கள்.

ஃபுளூரைடு பேஸ்ட்

புளுரைட் இல்லாத பேஸ்ட் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் தாமாகவே வாய் கொப்பளிக்க கற்றுக் கொள்ளும் வரையில் புளுரைட் பேஸ்ட் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பேஸ்ட் மருந்து கடைகளில் கிடைக்கும். மிக குறைந்த அளவிலேயே பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வாய் கொப்பளித்தல்

குழந்தைகள் வாய் கொப்பளிக்க சுத்தமான குடிநீரை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஒரு வேளை துப்புவதற்கு பதில் தவறுதலாக அவர்கள் விழுங்கி விட்டால், எந்த தொந்தரவும் ஏற்படாது.

கற்றுக்கொடுங்கள்

குழந்தைகளுக்கு எவ்வாறு பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும் என பெற்றோர்கள் கற்று கொடுக்க வேண்டும். அதே மாதிரியே அவர்களை செய்ய சொல்ல வேண்டும். நான்கு அல்லது ஐந்து வயது அடையும் போது அவர்கள் தாமாதமாகவே கற்று கொள்வார்கள். ஆனாலும் பெற்றோர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை, அவர்கள் பிரஸ் செய்வதை கண்காணிக்க வேண்டும்.

காய்கறிகள், பழங்கள்

ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவு, உறுதியான எலும்பு வளர்ச்சிக்கும், பற்கள் வளர்ச்சிக்கும் துணை செய்யும். குழந்தைகளுக்கு பற்கள் வளர தொடங்கும் போது, அவர்கள் அதிகமாக சவைக்க விரும்புவார்கள். இந்த நேரங்களில் அவர்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் ஈறுகளிலும், பற்களிலும் ஒட்டி கொள்ள கூடிய உணவுகள் மற்றும் இனிப்பு மிகுந்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

பால் பாட்டில்

குழந்தைகள் பால் பாட்டிலுடன் உறங்க அனுமதிக்க கூடாது. முறையற்ற பற்கள் வளர்ச்சிக்கு இதுவே காரணமாகிறது. இது பற்களில் சொத்தையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகும் போது பல் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது சிறந்தது. அவர்களுக்கு மூன்று வயது தொடங்கும் போது, பல் மருத்துவரிடம அடிக்கடி காண்பித்து ஆலோசனை பெற வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button