கீரையை வைத்து சட்னி செய்யலாம். இந்த சட்னி சுவையாக இருக்கும். இப்போது இந்த சட்னியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த வெரைட்டி கீரை சட்னி
தேவையான பொருட்கள் :
புதினா, பாலக்கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
சாம்பார் வெங்காயம் – நான்கு,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* கீரை, கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சுத்தம் செய்த புதினா, பாலக்கீரையை கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
* சாம்பார் வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.
* உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
* வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து அரைத்த கீரையில் சேர்க்கவும்.
* இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்ற சத்தான சட்னி இது.