30.7 C
Chennai
Friday, Mar 13, 2026
201606220850399915 how to make Malli Kuzhambu SECVPF
ஆரோக்கிய உணவு

பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பை போக்கும் தனியா பத்திய குழம்பு

உடல் அலுப்பு, பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பு போன்ற எந்தப் பிரச்சனைகளை பத்தியக் குழம்பு நீக்கும். தனியா பத்திய குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பை போக்கும் தனியா பத்திய குழம்பு
தேவையான பொருட்கள் :

தனியா (கொத்தமல்லி விதை) – 3 ஸ்பூன்,
கடலைப் பருப்பு – ஒரு ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்,
கடுகு – ஒரு ஸ்பூன்,
எள்ளு – ஒரு ஸ்பூன்,
மிளகு – ஒரு ஸ்பூன்,
நெய் – ஒரு ஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 2,
புளி – கோலிகுண்டு அளவு,
பெருங்காயம், மஞ்சள் தூள் – சிறிதளவு,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்,
எண்ணெய் – 2 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தனியா, கடலைப் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு இவற்றைத் தனித்தனியே வறுத்துப் ஆற வைத்து பொடித்துக்கொள்ளவும்.

* புளியை திக்காகக் கரைத்து கொள்ளவும்.

* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கரைத்த புளியை ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், அரைத்தப் பொடியைப் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

* எல்லாம் கொதித்து வாசனை வந்து கெட்டியானதும் இறக்கி விடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, எள், கறிவேப்பிலை தாளித்துக் குழம்பில் கொட்டவும்.

* இதைச் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். இதை மண் சட்டியில் செய்தால் இன்னும் சுவை கூடும். மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். 201606220850399915 how to make Malli Kuzhambu SECVPF

Related posts

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆரோக்கிய குறிப்புகள்!!!

nathan

தினமும் ஃபிரஸ் ஜூஸ் குடித்தால் உயிருக்கே ஆபத்து! திடுக்கிடும் தகவல்!

nathan

சுவையான இரும்புச்சத்து நிறைந்த ராஜ்மா சுண்டல்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஓட்ஸ் தயிர் பாத்

nathan

soya beans in tamil – சோயா பீன்ஸ்

nathan

சாக்லெட் பன்னகோட்டா வீட்டிலேயே செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா பகல் உணவுக்கு பின் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

உங்களுக்கு உலர்திராட்சை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

nathan

உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிட்டுக்கொண்டே எடையை ஈஸியாக குறைக்க உதவும் தந்திரங்கள்…!தெரிந்துகொள்வோமா?

nathan