201606200710126873 Women diseases repellent balanced nutrition SECVPF
ஆரோக்கிய உணவு

பெண்களின் நோய்களை விரட்டும் சமச்சீர் சத்துணவு

பெண்களில் பலர் ஊட்டச் சத்துணவு கிடைக்காத காரணத்தினால் தான் நீரிழிவு, இதயநோய், ரத்தச் சோகை போன்றவற்றுக்கு ஆளாகின்றனர்.

பெண்களின் நோய்களை விரட்டும் சமச்சீர் சத்துணவு
பெரும்பாலான நோய்களுக்கு ஊட்டச்சத்து இல்லாத உணவு வகைகளே காரணம் என பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் பெண்களில் பலர் ஊட்டச் சத்துணவு கிடைக்காத காரணத்தினால் தான் நீரிழிவு, இதயநோய், ரத்தச் சோகை போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துணவு வகைகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம்.

அத்திப்பழம் எண்ணற்ற தாதுச் சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கச் செய்கின்றன. எனவே வாரம் இருமுறையாவது அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் உண்ணும் உணவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கனிகளில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவு பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.

தக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளது. இது இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்கள் அன்றாட உணவில் தக்காளியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். (இப்போது தக்காளி விற்கும் விலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழத்தான் செய்யும். விலை குறையும் போது நன்றாக தக்காளி சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்).

பெண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பது அவசியம். இந்த ஒமேகா 3 அமிலம், நெத்திலி, கானாங்கெளுத்தி, மத்தி என அனைத்து வகை மீன்களிலும் உள்ளது. எனவே மீன் உணவு அவசியம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.

மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட் போன்றவற்றையும் உட்கொள்ளலாம். இதன் மூலம் இதயநோய்கள், முடக்குவாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

பெண்கள் தினசரி இருவேளை பால் அருந்த வேண்டும். பாலில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய்களை தவிர்க்கமுடியும்.

ஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் வைட்டமின் பி-6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. இவை, பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு மாதவிடாய் காலச் சிக்கல்களையும் தவிர்க்கிறது.

கீரைகளில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கீரைகளில் உள்ள மெக்னீசியமும் பெண்களுக்கு மாதவிடாய்ச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமனையும் தடுக்கிறது. எனவே தினசரி உணவில் பெண்கள் கீரை உட்கொள்வது அவசியம். ஆக, நல்ல சத்தான சமச்சீர் ஆகாரம் மூலம் நோய்களைத் தடுக்கமுடியும். குடும்பத்தின் அச்சாணி பெண்கள் என்பதால் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் குடும்பமே ஆரோக்கிய குடும்பமாக மாறிவிடும்.201606200710126873 Women diseases repellent balanced nutrition SECVPF

Related posts

சுவையான மட்டன் குடல் குழம்பு

nathan

சளியை துரத்தும் தூதுவளை துவையல்!

nathan

கலப்பின பசுவின் பாலை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

முட்டைக்கோஸ் (கோவா) ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரித்து கொண்டே செல்லுமாம்..

nathan

வெற்றிலையில் நெல்லி ரசம் எப்ப‍டி வைப்ப‍து?…

sangika

நீண்ட வாழ்வு தரும் உணவுப் பழக்கம்

nathan

கசப்பே இனிப்பு! வேப்பம்பூ ரெசிப்பி!

nathan

சூப்பர் டிப்ஸ்! பாகற்காய் சாப்பிடவே பயமா இருக்கா? இத படிங்க இனி தினமும் சாப்பிடுவீங்க..!

nathan