32.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
5V9bdkn
சிற்றுண்டி வகைகள்

கறிவேப்பிலை வடை

என்னென்ன தேவை?

சுத்தம் செய்த கறிவேப்பிலை – 1 கப்,
கடலைப்பருப்பு – 1 பெரிய கப்,
காய்ந்த மிளகாய் – 4,
சோம்பு – 1 டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு,
பொடித்த வெங்காயம் – 1 விருப்பத்திற்கு,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
பொடித்த பச்சைமிளகாய் – 2.


எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். நீரை வடித்து அதில் காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, ½ கப் கறிேவப்பிலை, உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து இத்துடன் பொடித்த வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கெட்டியாக கலந்து சிறு சிறு வடையாக தட்டி எண்ணெயை காய வைத்து, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இந்த வடை மிக சுவையாக கறிவேப்பிலை மணத்துடன் இருக்கும், வயிற்றுக்கும் உடம்புக்கும் மிகவும் நல்லது. வித்தியாசமாக இருக்கும். தயிர், பருப்பு, ரசம், பொங்கலுடன்சேர்த்துக்கொண்டால் சுவையாக இருக்கும்.5V9bdkn

Related posts

ரவைக் கிச்சடி

nathan

சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை இட்லி

nathan

அதிரசம் என்ன அதிசயம்?

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் மசாலா நூடுல்ஸ்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

nathan

பிரெட் க்ராப்

nathan

சுவையான பிஸ்கீமியா ஸ்நாக்ஸ்- செய்வது எப்படி?

nathan

பிரட் பகோடா :

nathan